Home சம்பவம் காசிமேட்டில் துணிகரம் விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 150 சவரன், ரூ. 10 லட்சம் கொள்ளை

காசிமேட்டில் துணிகரம் விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 150 சவரன், ரூ. 10 லட்சம் கொள்ளை

11
0
SHARE

சென்னை, செப்,11

சென்னை,காசிமேடு பகுதியில், விசைப்படகு உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 150 சவரன் நகை, ரூ. 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை, காசிமேடு, காசிமா நகர், முதல் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல், இவரின் மகன்  பாஸ்கர்(51), இவர், சொந்தமாக, விசைப்படகுகள் வைத்துள்ளார். கடந்த,

வெள்ளிக்கிழமை அன்று, பாஸ்கர், தனது குடும்பத்துடன் , பெரியப்பாளையம் சென்றார். சனிக்கிழமை இரவு, வீட்டை பூட்டிக்கொண்டு, பாஸ்கரின், கல்லூரி படிக்கும் இளைய மகன் சுப்பிரமணி மற்றும் உறவினர் ரஞ்சித் ஆகியோரும்,  பெரியப்பாளையம் சென்றனர். இந்த நிலையில், நேற்று காலை, அதே பகுதியில் வசிக்கும்,பாஸ்கரின் உறவினர் பிரபு என்பவர், அந்த வழியாக வந்துள்ளார். அப்போது, பாஸ்கரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், போலீசுக்கு உடனடியாக தகவல் தெரித்தார். சம்பவ இடத்துக்கு, இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் சேசன் சாய் மற்றும் காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது,  பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் , இருந்த 150 சவரன் நகை, ரூ. 10 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் ஷீபாவும் கொண்டு வரப்பட்டது.  இது, தொடர்பாக, காசிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.