Home தலையங்கம் சாலைவிபத்துகளில் தமிழகம் முதலிடம்

சாலைவிபத்துகளில் தமிழகம் முதலிடம்

14
0
SHARE

1990&களில்சாலைகளும் அதிகமில்லை, வாகனங்களும் அதிகமில்லை அதனால் விபத்துகள் எங்கோ ஒன்றுதான் எதிர்பாராதவிதமாக நடந்தது. ஆனால் இப்போது விபத்து என்பதே அட, அதுகென்ன பன்ன முடியும் விதி என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு  வாகனங்களின் எண்ணிக்கையும், சாலைகளில் நெருக்கமும்அதிகரித்திருக்கிறது.  மற்ற மாநிலங்களை விட தமிழகம் தான் கடந்த சில வருடங்களாக சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகித்து வருகிறது.

உயிரிழப்புகளில்முதலிடம்வகிப்பதால்யாருக்குஎன்னபயன். விபத்துகள் குறைகிறதோ இல்லையோ? ஆனால் வருடந்தோறும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டுதான்இருக்கின்றன. திட்டங்கள் போடப்பட்டிருக்கிறது, ஆனால் நடைமுறைப்படுத்தப் பட்டதா என்பது சந்தேகம் தான்.சுரங்கப்பாதையில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது, விபத்துகளை குறைப்பதற்காக, ஆனால் இன்னும் அமல்படுத்தப் படவில்லை. சாலைகள் மட்டும் ஒழுங்காய் அமைந்தால் போதுமா? வாகன ஒட்டிகளும் கவனமாயிருக்க வேண்டும்?.

இயங்கும் பஸ் மண்ணுக்குள் இறங்குவதும் கழிவுநீர் சாலைகளில் வெள்ளமாய் போவதும்தமிழகத்தில் மட்டும்தான் சாத்தியம். இதற்காக அரசு வீதியில் இறங்கியா வேலை செய்யமுடியும், வேடிக்கைதான்பார்க்க முடியும்..?அரசின்கவனக்குறைவால் லட்சக்கணக்கில் விபத்துகள் அரங்கேறினாலும், வாகனஓட்டிகளின்

கவனக்குறைவாலும் ஆயிரக்கணக்கில்விபத்துகள் தினந்தோறும் நடக்கின்றன.

தமிழ்நாட்டுசாலைகளின்நிலைமையைகருத்தில்கொண்டு, வாகனம் ஓட்டும் போதுசெல்போன் பயன்படுத்துவதையும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும், நெரிசல் அதிகமுள்ள இடங்களில் அதிவேகத்தில்செல்வதையும் தவிர்த்தால் மட்டுமே தமிழகத்தில்  விபத்துகளைகுறைக்க முடியும், இல்லையென்றால்

கடைசி வரைக்கும் தமிழகத்திற்கு தான் முதலிடம். ஒரிஜினல் லைசன்சை கட்டாயமாக்கிய அரசு, ஹெல்மெட்டை கண்டுகொள்ளாமல் விடுவது மக்களின் நலனிற்காகவா? இல்லை அரசின்வருவாய்க்காவா?. எதிர்பாராத விதமாக ஒரிஜினல் லைசன்ஸ் தொலைந்துவிட்டால் மீண்டும் போக்குவரத்து காவல்துறையினரேபெற்றுத்தருவார்களா? இல்லை மறுமுறை எடுப்பவர்கள் லஞ்சம் கொடுக்க அவசியமில்லையா?… இப்படி ஏதேனும் சட்டத்தைஅமல்படுத்துங்கள் மக்கள், அரசு இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வெளிநாடுகளில் விபத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும்அதிவேகத்தில் செல்பவர்களின் புகைப்படங்கள் அவரவர் வீட்டுக்கே செல்லும் அது போன்ற திட்டங்கள் இல்லாயென்றாலும்,உயிரிழப்புகளை குறைப்பதற்கு முறையான திட்டங்களை அறிவியுங்கள்.

மக்கள் வரியே அரசுக்கு வருமானம், இது போக ரோட்டோரங்களில் சில காவல் துறை அதிகாரிகள்  பணத்தை மிரட்டி பிடுங்குவதை தவிர்க்கவேண்டும்.சட்டங்களும், திட்டங்களும் நம் உயிரைக்காப்பாற்றத்தான் இருக்கிறது என்ற எண்ணம் மக்களுக்கு வரும்போது தான் விபத்துகள் குறையும்,ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு அய்யோ அபராதம் கட்டணுமே என்ற எண்ணம்தான் தலைதூக்குகிறது. வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து சாலைவிதிகளை மதித்து நடந்தாலே பாதி விபத்துகள் குறையும். ஆகவே வாகன ஓட்டிகள் விழிப்புடன் செயல்பட வேண்ணும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.