Home மற்றவை எல்.கே.ஜி. முதல் 5 ம் வகுப்பு  வரை ஆசிரியர் பயிற்சி பெறாதவர்கள் பணிபுரிய தகுதியற்றவர்கள்...

எல்.கே.ஜி. முதல் 5 ம் வகுப்பு  வரை ஆசிரியர் பயிற்சி பெறாதவர்கள் பணிபுரிய தகுதியற்றவர்கள் மெட்ரிக்குலேசன் இயக்குநர் அறிவிப்பு

19
0
SHARE

சென்னை, செப்.11&

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி பெறாமல்  ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு தகுதியற்றவர்கள் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் அறிவித்துள்ளார்

இது குறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு அனுப்பி உள்ள செயல்முறைகளில்,  மாணவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை மேம்படுத்த குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி மாணவர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சியை கட்டாயம் முடித்திருத்தல் வேண்டும். எல்.கே.ஜி.முதல் 5 ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி பட்டய படிப்பினை முடித்திருக்க வேண்டும். எல்.கே.ஜி.முதல் 5 ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியை ஏதும் பெறாமல் இருந்தால், தேசிய திறந்தநிலைப் பள்ளி நடத்தும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிச்சி எடுத்தல் வேண்டும்.

மேலும் அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர்களும் பள்ளி முதல்வர்களுக்கு இது குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.   

இந்த பயிற்சியை பெறுவதற்கு ஷ்ஷ்ஷ்://பீவீமீபீ.ஸீவீஷீs.ணீநீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் வரும் 15 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த இணையதளத்தில் தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சியை பெறுவதற்கு மாவட்ட அளவில் அதிகளவில் விண்ணப்பம் செய்யவில்லை என தெரிகிறது. எனவே மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர்கள், பயிற்சி பெறாத ஆசிரியர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களிடம் இருந்து பெற வேண்டும். அதில் எவர் பெயரும் விடுபடவில்லை என்று சான்று பெறப்பட வேண்டும். அனைத்து பள்ளிகள் சார்பாகவும் வருகைப் பதிவேடு எடுத்துவரச் செய்து பெறப்பட்ட பட்டியலுடன் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களை நேரில் வரவைத்து பயிற்சிக்கு பதிவேற்றம் செய்ய வேண்டும். முறையாக பயிற்சி பெறாமல் இருந்து, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி முறைப்படுத்திக் கொள்ளதாவர்கள் ஆசிரியர்களாக பணிபுரியத் தகுதியற்றவர்கள். பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து ஆசிரியர்கள் சார்பாக பயிச்சிக்கட்டணம் இணையவழியாகவே செலுத்தப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.