Home மற்றவை நேஷனல்இன்ஸ்டிடியூட்ஆப்பெர்சனல்மேனேஜ்மெண்ட் 2017ம் ஆண்டிற்கான தேசிய மாநாடு

நேஷனல்இன்ஸ்டிடியூட்ஆப்பெர்சனல்மேனேஜ்மெண்ட் 2017ம் ஆண்டிற்கான தேசிய மாநாடு

13
0
SHARE

சென்னை, செப். 11&

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பெர்சனல் மேனேஜ்மெண்ட்ன் 2017ம் ஆண்டிற்கான தேசிய மாநாடு சென்னை தாஜ் கொரமண்டல் ஓட்டல், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறஉள்ளது.

தேசிய அளவில் பணியாளர் நிர்வாகம், மனிதவள மேம்பாடு, பணி இடத்தில் தொழில் உறவு மற்றும் பயிற்சிக்களுக்கு பொறுப்பான தொழில் ரீதியான நிர்வாக அதிகாரிகளை அங்கத்தினர்களாக கொண்ட ஸ்தாபனம் தான் நேஷனல் இன்ஸ்டிடியூட்ஆப் பெர்சனல் மேனேஜ்மெண்ட். இந்தியா முழுவதும் 10000 அங்கத்தினர்களும் 53 கிளைகளும் கொல்கத்தாவை தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளின் தொழில்திறமை முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான அகில இந்தியா மாநாட்டை வரும் 15 மற்றும் 16ம்தேதிகளில் தாஜ்கொரமண்டல் ஓட்டலில்  அதிர்வான மாற்றங்களை எதிர் கொண்டடுவரும் தற்போதைய வியாபார சூழ்நிலையில் மனித வளத்திற்கான இடம்என்றதலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு ஆசார்யா என்.எல்.சி எல்.டி.டி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தலைமையில் நடைபெற உள்ளது. மத்திய அரசு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மாநாட்டை தொடங்கி வைக்கிறார். 800 உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

தொழில்துறை,மனிதவள நிர்வாகம் ஆகியவற்றின் நிபுணர்களும், இதர வல்லுனர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். சிங்கப்பூர், மொரீஷியஸ், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டு வல்லுனர்களும் மாநாட்டில் பேச இருக்கின்றனர். தமிழ்மொழி மேம்பாடு மற்றும் புதைபொருள் இயல்துறையின் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார்.வியாபாரத்தில் பலதரப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் அவற்றைஎதிர்கொள்வதற்கான திட்டங்கள், யுத்திகள், தொழிற்நுட்ப மாற்றங்களினால் ஏற்படும் அதிர்வான விளைவுகள்,

மாற்றங்களை சமாளிக்க அரசாங்க மற்றும் சமுதாயம் சம்பந்தப்பட்ட கொள்கை மாற்றங்களுக்கான தேவையான முயற்சிகள் மற்றம் நடவடிக்கைகள், தொழில் மற்றும் இதர ஸ்தாபனங்களில் வேலையில் எதிர்கொள்ள வேண்டிய மாற்றங்கள், பணி இடங்களில் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குழுக்களை எவ்வாறு மனதளவில் ஈடுபாட்டுடன் செயல்பட வைப்பது, மற்ற நாடுகளில் பணியாளர் ஈடுபாடு நடவடிக்கைகளில் தற்போதைய போக்கு மற்றும் நிலைமை போன்ற பிரச்சனைகள் மற்றும் கருத்துகள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்களாக நடை பெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here