Home தமிழகம் நீட் தேர்வினால் 98 சதவீத மருத்துவ இடங்கள் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு கிடைக்கும் கோவையில் அன்புமணி...

நீட் தேர்வினால் 98 சதவீத மருத்துவ இடங்கள் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு கிடைக்கும் கோவையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி 

30
0
SHARE

கோவை, ஆக. 14& நீட் தேர்வினால் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 98 சதவீதம் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு கிடைக்கும் எனகோவையில் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிரச்சார பயணத்தில் கலந்து கொள்ள கோவை வந்த பா... இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அத்திக்கடவு  அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இன்று  ஒரு நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தவுள்ளோம். 55 ஆண்டு கால கோரிக்கையான இத்திட்டம் நிறைவேற்றினால் 3 மாவட்டங்கள் பயன் பெறும்.

பவானி ஆற்று நீர் ஆண்டுக்கு 20 & 100 டி.எம்.சி கடலில் கலந்து வீணாகிறது. 1.2 டி.எம்.சி. தண்ணீரில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.வெறும் அறிவிப்போடு நிற்கும் இத்திட்டத்தைதமிழகஅரசுஉடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

மத்திய அரசின் அடிமைகளாக தமிழக அரசு உள்ளது. மாநில அரசின் உரிமைகள் பறிபோகிறது. சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வினால் 95 முதல் 98 விழுக்காடு மருத்துவ மாணவர் இடங்கள் சி.பி.எஸ்.சிமாணவர்களுக்குசெல்ல உள்ளது. நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு திவாலாகி விட்டது. .தி.மு. 3 அணியினரும் கூட்டு கொள்ளையர்கள்டெங்கு காய்ச்சலை தமிழக அரசு மூடி மறைக்கிறது. தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் வர வேண்டும். திராவிட ஆட்சியின் சீரழிவுகள் குறித்து என்னோடு விவாதிக்க தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வர வேண்டும். 50 ஆண்டுகளாக நடிகர்கள் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். இனி படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.