Home சினிமா மலையாள சினிமாவில் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது நடிகை பாவனா பேட்டி

மலையாள சினிமாவில் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது நடிகை பாவனா பேட்டி

24
0
SHARE

திருவனந்தபுரம், செப். 11&

வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட பல இக்கட்டான காலக்கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தது எனது குடும்பமும், ரசிகர்களும்தான். என்னை  யாராலும் தோற்கடிக்க முடியாது’’ என நடிகை பாவனா கூறினார்.

பிரபல மலையாள நடிகை பாவனா அளித்த பேட்டி: மலையாள சினிமாவில் ஆண் ஆதிக்கம்தான் அதிக அளவில் உள்ளது. சினிமாவை தேர்ந்தெடுப்பதில் பெண்களுக்கு எந்த சுதந்திரமும் இல்லை. கதாநாயகர்களை வைத்துதான் டிவி சேட்டிலைட் உரிமைக்கு கூட அதிக விலை கிடைக்கிறது.

எந்த நடிகைக்காகவும் யாரும் படத்தை வாங்குவதில்லை. நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் நான் நடித்த படம் தியேட்டர்களில் அதிக நாட்கள் ஓடியதற்காக எனக்கு  யாரும் சம்பளத்தை கூட்டித் தரவில்லை.

சினிமா துறையில் நடிகைகளுக்கு 2வது இடம்தான் உள்ளது. இன்று வரை நான் பட வாய்ப்புக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை. திருமணத்திற்கு பிறகும் நான் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். சினிமாவில் நடிப்பதற்கு எனது வருங்கால கணவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டார். அவர் பெண்களை மதிப்பவர்.

சினிமா துறையில் பல இடையூறுகள் இருந்தாலும் இந்த துறைக்கு பெண்கள் தைரியமாக வரவேண்டும். சினிமாவில் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் அதற்காக பெண்கள் முடங்கி விடக்கூடாது. மலையாள சினிமாத்துறையில் பெண்களுக்காக ஒரு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்பெண்

கலைஞர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வாய்ப்பு ஏற்படும்.

எனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களில் இருந்து மீளுவதற்கு எனது குடும்பத்தினரும், ரசிர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதற்கு மேலாக நான் ஒரு தனி ஆள் அல்ல என்பதை அப்போது தான் உணர்ந்தேன். எனது மனவலிமையும் எனக்கு உதவி  புரிந்தது. என்னை  யாராலும் தோற்கடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.