Home மற்றவை நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்த பேராட்டம் ஜாக்டோ & ஜியோ அறிவிப்பு

நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்த பேராட்டம் ஜாக்டோ & ஜியோ அறிவிப்பு

11
0
SHARE

சென்னை, செப். 10&

நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜாக்டோஜியே அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் ரத்து, 8வது ஊதியக்குழு அமைத்தல்,தொகுப்பூதியம், மதிப்பூதியம் களைத்து காலமுறை ஊதியம் வழங்குதல் போன்றகோரிக்கைகளை முன் வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதிலும்பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.கடந்த மாதம் 2லட்சத்திற்குமேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாபெரும் ஆர்பாட்டத்தைநடத்தினர், கடந்த 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும் நடைபெற்றது. 7ம் தேதி முதல் தொடர்வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டனர்.இதனை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தியது.

ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பின்னர்  ஈரோட்டில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது அந்த கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் போராட்டத்தை தள்ளி வைப்பது என்றும் மற்றொரு பிரிவினர், திட்டமிட்டபடி போராட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்தனர்.

போராட்டத்தை கைவிட்டுவிட்டு அனைவரும் வேலையில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர்  வேண்டுகோள் விடுத்தார்.வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் இதனை தவிர்த்துவேறு வழியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில்மதுரை கிளை 7ந் தேதியன்று உத்தரவிட்டது.இதனை உடனடியாக செயல்படுத்தஅனைவரும் வேலைநிறுத்தை கைவிட்டு பணிக்கு உடனடியாக திரும்பவேண்டும் என்றுதலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று ஜாக்டோ ஜியோ அமைப்பின்உயர்மட்ட குழு கூட்டம் திருவல்லிகேணியில் நடைபெற்றது.பின்னர்ஒருங்கிணைப்பாளர்  சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார்.எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 11 ம் தேதி முதல் ( நாளை)வேலைநிறுத்த பேராட்டத்தை மீண்டும் நடத்தவுள்ளோம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு மறியல் பேராட்டம் நடத்துவது என்றும் அதற்க்குள் அரசுகோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் 13 ம் தேதி முதல்  அனைத்து மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.இந்த பேராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள். 28 ஆசிரியர்கள் சங்கம்,.64 அரசு ஊழியர்கள் சங்கம் பங்கேற்கிறது.மேலும் நீதிமன்ற ஊழியர் சங்கம்,தலைமை செயலக சங்கம் இதில் கலந்துகொள்கிறது.இது தொடர்பான நீதிமன்ற வழக்கையும் நாங்கள் சந்திப்போம்.இவ்வாறு தெரிவித்தார்.