Home தலையங்கம் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்

16
0
SHARE

இ ந்தியா எப்போதும் பிரச்சனைகளால் சூழப் பட்டிருந்தாலும், அதில் குறிப்பிடத்தக்கது தமிழ்நாடுதான். பரபரப்பு என்பதற்கு எடுத்துக்காட்டாய் தினந்தோறும் கணக்கில்லா பிரச்சனைகள் தமிழ்நாட்டு மக்களை வெறுப்படையச்செய்கிறது. மழைக்காலம் என்றாலே பல்வேறு நோய்த் தொற்றுக்கள் ஏற்படும்.

இந்நிலையில் அதி வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு பல உயிர்கள் பலியாகிறது.  என்னதான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7000தொட்டுவிட்டது.  இதற்கு காரணம் போதிய அளவிற்கு சுகாதார அமைப்புகள் இல்லாததேயாகும். நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில் இருப்பவர்கள்தான் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராமப் புறங்களில் இருப்பவர்களுக்குடெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் தான் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆயிரக்கணக்கான கொசு வகைகள் உலகம் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன, இதில் சில அரிய வகை கொசுக்கள் மட்டும் தான் நோய் தொற்றைஏற்படுத்தும் கிருமிகளை பரப்புகின்றன.  இந்த வகை கொசுக்களை அழிப்பதற்கு அரசு மழைக்காலங்களுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அப்படி இல்லையானால் இப்போதாவது எடுக்கவேண்டும்.

அப்போதுதான் உயிரிழப்புகளை தடுக்கமுடியும். நோய்க் கிருமிகள் ஒரு புறம் இருந்தாலும் வளர்ந்துவரும் நாட்டில் அதை தடுக்கும் வழிமுறைகள் இல்லாமல்இருப்பது மிகப்பெரும் தவறு. இப்படி சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவர்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலையில் மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வுமுறையை அறிவித்திருப்பது நம் தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.  தாய்நாடு, தாய்மண் என்பதெல்லாம் நம்மோடு ஒட்டி பிறந்த ஒன்று. அவர்களுக்கு தான் நாட்டுப்பற்று அதிகம் இருக்கும்.

பிற நாட்டவர்கள் படிப்பதில் தமிழ்நாட்டவர்களுக்கு பிரச்சனையில்லை, ஆனால் அதுவே தமிழர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போகும் போது பெரும் பிரச்சனைதான். தமிழ்நாட்டில் திறமையும், கல்வியறிவு உள்ளவர்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்வரை தமிழ்நாடு சுகாதாரத்தில் பின்தான் தங்கிதான்யிருக்கும். தமிழ்நாட்டவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவர்களாகபணியாற்றும்போது பணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் நலனையும் கருத்தில் கொள்வர்.

ஆனால் மற்றவர்கள் மருத்துவம் என்பதே பணத்திற்கு தான் என்ற வியாபார நோக்கத்தில் தான் பார்ப்பார்கள். தவறு அவர்கள் மீது இல்லை,அவர்களின் தாய்மண்ணும், தாய்மொழியும் வேறு அதனால்தான் உயிரைக்காக்கும் மருத்துவம் வியாபாரமகிறது.இப்போது மத்திய& மாநில அரசுகள் டெங்கு காய்ச்சலை  போர்க்கால நடவடிக்கை போல எடுத்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here