Home சம்பவம் தனியாக வசித்த பெண் கொலை; 40 சவரன் கொள்ளை

தனியாக வசித்த பெண் கொலை; 40 சவரன் கொள்ளை

15
0
SHARE

சென்னை, செப்,10 சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில், தனியாக வசித்து வந்த வட்டிக்கு விடும் பெண் ஒருவரை கொலை செய்து, 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம்,  பழனியம்மன் கோயில் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் கலா (52). இவர், வடிக்கு விடும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரின்  கணவர் துரை,   கருத்து வேறுப்பாட்டின் காரணமாக, கலாவை விட்டு துரை  பிரிந்து விட்டார்.  கலா  தனியாக வசித்து வந்தார்.

இவர்களுக்கு,  கமல் (35),ஜெயக்குமார் (23) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள், அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதால், அங்கேயே வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், கமல், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தனது தாயாருடன் செல்போன்  மூலம் பேசுவதற்கு முயற்சித்தார்.ஆனால் கலாவின் செல்போன் மணி அடித்தும், அதை அவர்  எடுத்து பேசவில்லையாம்.இந்நிலையில் அன்று மாலையும் செல்போன்  மூலம் கமல் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.அப்போதும் கலா செல்போனை எடுத்து பேசவில்லை.

  இதனால் சந்தேகமடைந்த கமல், கலா வசிக்கும் வீட்டின் அருகே  உள்ள தனது உறவினர் பவானியை தொடர்புக் கொண்டு, தனது தாயாரை பார்த்துவரும்படி கூறியுள்ளார். உடனே பவானி, அங்கு சென்றபோது கலா வீடு பூட்டி கிடப்பதை பார்த்து, கமலுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.  இதை பார்த்த கமல், வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கு வீட்டின் சமையல் அறையில் கலா தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்து இருந்தார். அவர் அணிந்திருந்த தங்கநகை,வீட்டின் பீரோவில் இருந்தது  என மொத்தம் 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.  இது குறித்து அவர், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கலா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.