Home சுடச்சுட விவேகம் படப்பிடிப்பின்போது தோள்பட்டையில் காயம்: நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன் சென்னை மருத்துவமனையில் நடந்தது

விவேகம் படப்பிடிப்பின்போது தோள்பட்டையில் காயம்: நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன் சென்னை மருத்துவமனையில் நடந்தது

15
0
SHARE

சென்னை, செப். 10&

விவேகம் படப்பிடிப்பின்போது தோள்ப்பட்டையில் காயம் அடைந்த நடிகர் அஜித்துக்கு சென்னை மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்தது.

சிவா இயக்கத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விவேகம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடந்தது. இப்படத்துக்காக அஜித் தீவிர உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றினார்.

பல்கேரியாவில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சியில் எதிர்பாராத விதமாக அஜித்தின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  வலியைத் தாங்கிக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அஜித். எனினும் ஒரு மாதத்துக்குள் தோள்பட்டையில் ஆபரேஷன் செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். சென்னை திரும்பிய அவர் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 7&ந் தேதி சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டார். அங்கு அஜித்துக்கு தோள்பட்டையில் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் ஒருநாள் இருந்து சிகிச்சை பெற்ற அஜித், பின்னர் வீடு திரும்பினார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆபரேஷன் காரணமாக அஜித் இன்னும் 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். எனவே இன்னும் 6 மாதங்களுக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

அஜித்துக்கு ஏற்கனவே பல்வேறு விபத்துகளில் பலத்த காயம், எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டுள்ளது. இதற்காக இடுப்பு எலும்பு, முதுகுதண்டு, கால் ஆகியவற்றில் ஆபரேஷன் நடந்துள்ளது. இப்போது தோள்பட்டையில் ஆபரேஷன் நடந்துள்ளது. அஜித்தை யாரும் பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here