Home சுடச்சுட ஜோலார் பேட்டை வீட்டில் இருக்கும் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று நோய்க்கு மருத்துவ பரிசோதனை

ஜோலார் பேட்டை வீட்டில் இருக்கும் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று நோய்க்கு மருத்துவ பரிசோதனை

11
0
SHARE

ஜோலார்பேட்டை, செப். 10&

ஜோலார்பேட்டையில் வீட்டில் ஓய்வெடுத்து வரும் பேரறிவாளனுக்கு நேற்று முன்தினம் சிறுநீரக தொற்று நோய்க்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடைய தந்தை ஞானசேகரன் என்ற குயில்தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் தன்னை பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நீண்டநாள் கோரிக்கைக்கு பிறகு கடந்த மாதம் 24&ந் தேதி பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுதையானார். அதைத் தொடர்ந்து அவர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பழைய ஜோலாபேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவில் இருக்கும் தனது வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். பரோலில் தனது வீட்டில் ஓய்வெடுத்து வரும் பேரறிவாளன் நண்பர்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

இதன்படி இதுரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அவர் சந்தித்து பேசியுள்ளார். வேலூர் மத்திய சிறையில் இருக்கும் போதே பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோய்க்கும் வேலூர் அடுக்கம் பாறை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பரோலில் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவருக்கு நேற்று முன்தினம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி தியாகராஜன் ஜோலார்பேட்டைக்கு வந்து பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here