Home இந்தியா ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனை 4.3 சதவீதம் அதிகரிப்பு

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனை 4.3 சதவீதம் அதிகரிப்பு

13
0
SHARE

மும்பை, செப். 10&

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) கார் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 38,519 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை யாகியுள்ளன

புதிய ரேஞ்ச் ரோவர் வேலர் மற்றும் அகலமான சக்கரங்களை கொண்ட ஜாகுவார் எக்ஸ்எப்எல் ஆகிய கார்களை அறிமுகப் படுத்தியதே கடந்த மாதத்தில் விற்பனை அதிகமானதற்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாமற்றும்வடஅமெரிக்காவில்தொடர்ந்துஜாகுவார்லேண்ட்ரோவர்விற்பனைஅதிகரித்துவருகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் விற்பனை குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.“சர்வதேச அளவில் வட அமெரிக்காவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

மேலும் ஜாகுவார் எப்பேஸ் மற்றும் புதிய ரேஞ்ச் ரோவர் வேலர் கார்களும் அதிகம் விற்பனையாகியுள்ளன’’ என்று ஜே.எல்.ஆர். நிறுவனத்தின் விற்பனை செயல்பாட்டு தலைவர் ஆண்டி கோஸ் தெரிவித்துள்ளார். ஜாகுவார் பிராண்டு கார்களின் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 10,960 ஜாகுவார் பிராண்டு கார்கள் விற்பனை யாகியுள்ளன