Home தமிழகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாபேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாபேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

67
0
SHARE

கல்பாக்கம், ஆக. 13& தமிழக முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையட்டி திருக்கழுக்குன்றத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ...தி.மு.க நிறுவனருமான பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த 30.6.2017 முதல் தமிழக முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் பேரூராட்சிகள் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் தலைமையேற்று துவக்கி வைத்தார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.

இதில் திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், என 500&க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

இப்பேரணியானது பேரூராட்சி வளாகத்தில் துவங்கி பல தெருக்கள் வழியாகச் சென்று, மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.  பேரணியில் சென்ற மாணவ மாணவிகள் சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் ஓங்குக, கிருஷ்ணா நதிநீர் பெற்றுத் தந்த புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க, 5&வது உலகத் தமிழ் மாநாட்டினை மதுரையில் நடத்திய மன்னன் புகழ் ஓங்குக என புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் நற்பணிகள் குறித்த புகழ்பாடும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.

இதில் பேரூராட்சி ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையட்டி, நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளை பேரூராட்சி, சுகாதார ஆய்வாளர் சி.ரவிசங்கர் தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.