Home அரசியல் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது மம்தா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது மம்தா குற்றச்சாட்டு

12
0
SHARE

கொல்கத்தா, செப். 10&

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசால் சி.பி.. பயன்படுத்தப்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்தில் திரிணாமுல் கட்சியின் நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மம்தா பேசுகையில், நாரதா வீடியோ ஊழல் விவகாரத்தில் திரிணாமுல் கட்சியின் ஏராளமான தலைவர்களுக்கு எதிராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு சிபிஐயை பயன்படுத்தி வருகிறது. 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜ ஆட்சி அகற்றப்படும். நாரதா விவகாரத்தில் சிபிஐ சம்மன் அனுப்பப்பட்ட தலைவர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐயிடம் எந்த வித ஆதாரமும் கிடையாது. எனவே நாம் அஞ்சத் தேவையில்லை.

சிபிஐஉள்ளிட்டமத்தியபுலனாய்வுநிறுவனங்கள்திரிணாமுல்தலைவர்களைமனஉளைச்சலுக்குஉள்ளாக்கிவருகின்றன. தினமும் திரிணாமுல் கட்சி தலைவர்கள் யாருக்காவது சிபிஐ சம்மன் அனுப்பிய வண்ணம் உள்ளது.

இது அரசியல் ரீதியாக மிரட்டல் விடுப்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும். ஆனால் இதனால் மத்திய அரசுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. பாஜ சொன்ன எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை. 2019 தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் நிச்சயம் பாஜ இருக்காது.

துர்கா பூஜை, மொகரம் போன்ற பண்டிகைகளில் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்களில் சங் பரிவார் கட்சிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே திரிணாமுல் கட்சியினர் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து அவர்களது சதியை முறியடிக்க வேண்டும்.

திரிணாமுல்கட்சிவலுவாகஉள்ளஇடங்களில்துர்காபூஜைபோன்றவைபவங்களைபாஜஉள்ளிட்டகட்சிகளுக்குவிட்டுக்கொடுக்ககூடாது.  இதற்காக நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை கட்சியின் செயல்பாடுகள் குறித்து மேலிடத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here