Home சுடச்சுட தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத மருத்துவமனைகளில்அறுவை சிகிச்சை செய்ய தடை சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத மருத்துவமனைகளில்அறுவை சிகிச்சை செய்ய தடை சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

21
0
SHARE

புதுடெல்லி,செப்.9&

பிஜய் குமார் சின்ஹா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது மனைவியை அனுமதித்திருந்தேன். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

மனைவி மரணம்

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எனது மனைவி இறந்து போய் விட்டார். டாக்டர்களின் அலட்சியமே இதற்குக் காரணம். அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லை என்று கூறியிருந்தார்.

இது 23 ஆண்டு கால சட்டப் போராட்டமாகும். மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் முட்டி மோதிய பிஜய் குமார் சின்ஹா. கடைசியில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருந்தார். விசாரணைக் காலத்திலேயே அவர் இறந்தும் போய் விட்டார்.

ரூ.5 லட்சம் இழப்பீடு

அதனால் அவரது மகன் சவுமிக் வழக்கை நடத்தி வந்தார்.இந்தப் போராட்டத்தில் தற்போது நீதி கிடைத்துள்ளது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிஜய் குமார் குடும்பத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை தர உத்தரவிட்டது.

அதிரடி உத்தரவு

ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை வசதிகள் இருந்தால் அங்கு நிச்சயம் தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆபரேஷனே செய்யக் கூடாது.

அதேசமயம், மருத்துவர் தரப்பில் கவனக்குறைவு இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. எனவே மருத்துவர் மீதான புகார் கைவிடப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிரடியாக அறிவித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.