Home சம்பவம் திருத்தணி பகுதியில் தொடர் மழை வீட்டின் மேற்கூரை விழுந்து பள்ளி மாணவி படுகாயம்

திருத்தணி பகுதியில் தொடர் மழை வீட்டின் மேற்கூரை விழுந்து பள்ளி மாணவி படுகாயம்

26
0
SHARE

பொதட்டூர்பேட்டை, செப். 9&

பொதட்டூர்பேட்டைப் பகுதியில், தொடர் மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி ஒருவர் படுகாயங்களுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, சவட்டூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேணு என்பவர் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது.  அப்போது, வீட்டில் படித்துக் கொண்டிந்த அவரது மகள் வனிதா, 11&ம் வகுப்பு மாணவி, படுகாயமடைந்தார். அவரை, பொதுமக்கள் மீட்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து அவரை,  சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மழைக்கு இடிந்து விழுந்த வீட்டில் சேதமடைந்த பொருட்களை பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் அஜய்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.