Home தமிழகம் தொழில் பாதுகாப்பு இயக்குனரை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

தொழில் பாதுகாப்பு இயக்குனரை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

9
0
SHARE

சென்னை, செப். 9&

சென்னை அசோக்நகரை சேர்ந்தவர் எஸ்.பால்வண்ணம் இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யதுள்ள மனுவில் சென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கான துணை முதன்மை ஆய்வாளர் அலுவலகத்தில் தேர்வு நிலை கண்காணிப்பாளராக பணிபுரிந்து கடந்து 2012&ம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.

அதேபோல தொழிலக பாதுகப்பு மற்றும் சுகாதார இயக்குநரத்தில் உதவி தொழிற்சாலை ஆய்வாளராக கடந்த 1987&ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் காளியண்ணன். இவர் தன்னுடைய பணி பதிவேட்டில் உள்ள பிறந்த தேதியான 25.05.1959 என்பதை 20.09.1960 என்று மாற்றும்படி கடந்த 1992&ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அளித்து வந்த கோரிக்கையை தமிழக அரசும், மாநில நிர்வாக தீர்ப்பாயமும் ஏற்கவில்லை. பின்னர் இந்த தகவலை கோர்ட்டுக்கு தெரிவிக்காமல், தன் பிறந்த தேதியை மாற்ற உத்தரவினை பெற்றுள்ளார். இதனால் கடந்த மே மாதமே ஓய்வு பெறவேண்டிய காளியண்ணனுக்கு, அரசு தொழில் பாதுகாப்பும் மற்றும் சுகாதார இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே அவர் அப்பதவி வகிக்க தடை விதிக்கவேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுவுக்கு 8 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறைச் செயலாள உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here