Home அரசியல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு தாக்கல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு தாக்கல்

13
0
SHARE

புதுடெல்லி, செப். 9&

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்தது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஒரு வருடமாக நடத்தப்படாமல் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அப்போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கி நியாயமாக தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க. தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, ஆண், பெண், எஸ்.சி., எஸ்.டி. வார்டு பிரிப்பு என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் எப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி ஐகோர்ட்டில் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து வருகிற 18&ந் தேதிக்குள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நவம்பர் 17&ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தால் தி.மு.க.வின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here