Home தமிழகம் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் செண்பகத்தோப்பு அணை: நீர் ஷட்டர்கள் சீரமைக்கபடாததால் நேரும் அவலம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் செண்பகத்தோப்பு அணை: நீர் ஷட்டர்கள் சீரமைக்கபடாததால் நேரும் அவலம்

63
0
SHARE

போளூர், செப். 9&

போளூர் அருகே 20ஆண்டு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட அணையில் உள்ள ஷட்டர்கள் சீரமைக்க படாததால் அணைக்குவரும் தண்ணீர் முழுவதும் வீணாகிறது

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது

மலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள குப்பனத்தம் அணை, மிருகண்டா அணை ஆகியவற்றுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஜவ்வாதுமலையில் கானமலை, கோட்டமலை, கோவனூர், புலியங்குப்பம், மிதி,மேல்முருகை மந்தை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட்டு படவேடு அடுத்த செண்பகத்தோப்பு அணைக்கு வேகமாக தண்ணீர் வந்து

கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளாக பருவமழை போக்கு காட்டிய  நிலையில் கடந்த ஆண்டு வறட்சி வாட்டிய அவலத்தை சந்தித்த சூழலில், வருணபகவான் இந்த ஆண்டு காட்டும் கருணையால் கொட்டும் மழையால் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க இயலாத அவலம் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஏற்பட்டுள்ளது. பேளூர் அடுத்த செண்பகத்தோப்பு அணை தொடர் மழையால் நிரம்பியும் ஷட்டர் சீரமைக்கப்படாததால் மழைநீர்  வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.இதனால் விவசாயிகள் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அணையின் கொள்ளளவு முழுவதும் நிரம்பி தண்ணீர்வெளியேற தொடங்கியது. அணையில் உள்ள ஷட்டர்கள் பழுதடைந்து சீரமைப்படாமல் உள்ளதால் தேங்கி உள்ள தண்ணீர் பெருமளவு அணையின் 7 மதகுகள் வழியாக வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. மேலும் நீர்வரத்து கால்வாய்களும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அந்த வழியாக உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் வருவதும் கேள்விக்குறியாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு செண்பகத்தோப்பு அணையில் நீர் நிரம்பியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ஷட்டர் சீரமைக்கப்படாததால் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். விவசாயம் நிறைந்த மாவட்டமான திருவண்ணாமலையில் சாத்தனூர் அணைக்கு அடுத்த பெரிய அணை செண்பகத்தோப்பு அணை. இதன் மொத்த உயரம் 64 அடி. இப்போது 44அடிநிரம்பியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1&ம் தேதி நடந்த பேளூர் தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் செண்பகத்தோப்பு அணையில் ஷட்டர் சீரமைக்கப்படாததால் தேங்கும் தண்ணீர் அனைத்தும் வெளியேறி விடுகிறது.எனவே உடனடியாக ஷட்டரை சீரமைத்து தண்ணீரை தேக்கி விவசாய பணிகளுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் சொல்லி ஒரு மாதம் ஆன நிலையில் செண்பகத்தோப்புஅணை தற்போது நிரம்பியுள்ளது .விவசாயிகளின் எச்சரிக்கை அதிகாரிகளுக்கு ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ இருந்ததால் அவர்கள் அலட்சியம் தொடர்ந்ததால் அணையின் ஷட்டர் இன்னமும் சீரமைக்கப் படவில்லை.இதனால் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது.   1989ல் தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் போது இதுகுறித்து சட்டசபையில் பேசப்பட்டு1996ல் அணை கட்டுவதற்கு 21 கோடியே 38 இலட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால்நிதி ஒதுக்கீடு தள்ளிப்போனது. 2001ல் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு அணையின் மதிப்பீடு 34 கோடியாக திருத்தப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. கேரளாவைச்சேர்ந்த சந்திரகிரி கன்ஸ்ட்ரக்‘ன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2004இல் முடிக்க வேண்டிய அணையின் பணி முடிவு பெறவில்லை.அணைபராமரிப்பு இன்றியும் ஷட்டர்கள் தரமற்று பழுதடைந்து இருந்ததாலும் மழை பொழியும் காலங்களில் தண்ணீர் தேக்கப்படாமல் வீணாக வெளியேறியதுதான் மிச்சம்!இந்நிலையில் இந்த பாசனத்தால் பயன்பெறும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ‘செண்பகதோப்பு நீர்த்தேக்கத்தால் பயன் பெறுவோர் மற்றும் பாதுகாப்பு நலச்சங்கம்’ என்ற அமைப்பினை ஆரம்பித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்களில் பிரச்சாரப் பயணம், துண்டறிக்கை,சுவரொட்டி, உண்ணாவிரதப்  போராட்டம் எனத் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    இவர்கள் தங்களின் கோரிக்கைகளாக தரமாக அணை கட்டி முடிக்கப்பட வேண்டும், உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நீர்த்தேக்கம்உள்ள இடத்தில்அமைந்திருக்கும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும், ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், ஆற்றின் இணைப்பில் உள்ள ஏரிக்கால்வாய்களைத் தூர் வார வேண்டும் எனத் தமிழக முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்க்கும் கோரிக்கை வைத்தனர்.பொதுப்பணித்துறை சார்பில் அணையில் உள்ள ஏழு ஷட்டர்களை சீரமைத்து அணையை பயன் பாட்டிற்குக் கொண்டுவர ரூபாய் 9.00 கோடியே 95 இலட்சத்திற்கான மதிப்பீட்டிற்கு முன்மொழிவினை தமிழக அரசிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான ஆய்வினை கடந்த மே13ம் தேதி தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்.மு வடநேரே மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டனர். உடனடியாக பணி மேற்கொள்ளப்பட்டு அணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தனர்.ஆனால் இன்றுவரை அணையின் ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது பெய்து வரும் மழையால் அணைமுழுவதும் நிரம்பி தண்ணீர் முழுவதும் வெளியேறிவருகிறது

ஒருதிட்டம்உருவாக்கப்பட்டு 20 வருடங்களுக்குமேலாகியும்அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால் இதற்கு யார் பொறுப்பேற்பது? இனியாவது காலம் தாழ்த்தாமல் நிதிஓதுக்கீடு பெற்ற பின்னர் அணை பயன்பாட்டிற்கு வருவதற்கான அத்தனை பணிகளையும் முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.  பொதுமக்களின் எதிர்பார்ப்பான செண்பகத்தோப்புஅணையின் ஏழு ஷட்டர்களை சீரமைத்து அணையை பயன் பாட்டிற்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுபணித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா  சமீபத்தில் தண்ணீரை எப்படி எல்லாம் சேமிக்க முடியுமோ அப்படி எல்லாம் தண்ணீரை சேமியுங்கள்  அணைகள் கட்டவும்; ஏரிகள் குளங்கள் அமையுங்கள் என கோர்ட் உத்திரவிட்டுள்ளது அந்த அடிப்படையில் இந்த அணையின் ஷட்டர்கள் சீமைக்கப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படுமா எதிர்காலத்தை நினைத்து மழை நீரை சேமிக்கும் போக்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிட மேலானது தண்ணீரை நாம் சிக்கனமாக பயன்படுத்துவது!