Home சினிமா டாக்டரான த்ரிஷா

டாக்டரான த்ரிஷா

24
0
SHARE

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் த்ரிஷாவுக்கும் நயன் தாராவுக்கும் பெரிய போட்டியே நடக்கிறது. த்ரிஷாவுக்கு சொல்லும் கதை அவருக்குப் பிடிக்க வில்லையென்றால் அடுத்து இயக்குனர்கள் போய் நிற்கும் இடம் நயன் தாராவிடம்தான்

அப்படி கதை கேட்டு ஒப்புக் கொண்ட ஒரு படத்தில், அவர் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி இல்லை. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

திரிஷாவுடன் அஜ்மல், சக்தி வாசு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்கிறார். திருஞானம் டைரக்டு செய்கிறார். படத்தின் கதை திரைக்கதை வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார். இது, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு திகில் படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

திரிஷா தற்போது, மோகினி, கர்ஜனை, 96, போகி, சதுரங்க வேட்டை2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நிவின் பாலி ஜோடியாக ஒரு மலையாள படத்திலும் அவர் நடிக்கிறார்.