Home சம்பவம் கணவனின் கள்ளக்காதலால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைமரண வாக்குமூலத்தை வயிற்றில் எழுதி வைத்த அவலம்

கணவனின் கள்ளக்காதலால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைமரண வாக்குமூலத்தை வயிற்றில் எழுதி வைத்த அவலம்

9
0
SHARE

சென்னை, செப், 9

கணவனின், கள்ளக்காதல் தெரியவந்ததால், புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மேலும், தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து, தன்னுடைய வயிற்றில் மரண வாக்குமூலம் எழுதி வைத்த சம்பவம் மணலி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மணலி அண்ணா நகரை சேர்ந்தவர் டார்வின்(32), கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனி,29 வது தெருவை  சேர்ந்த தேவி என்பவருக்கும், கடந்த 2016ம் ஆண்டு, பிப்ரவரி மாதம்   திருமணம் நடந்தது. ஒன்றரை அவருடம் ஆகிய நிலையில், டார்வினுக்கும்,  தண்டையார் பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தேவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

மேலும் தேவிக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் வாங்கி வரும்படி டார்வின் வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் காலை கணவன்மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு டார்வின் வேலைக்கு சென்றுவிட்டார். மன வேதனையில் இருந்த, தேவி வீட்டில் உள்ள,  தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  மணலி போலீசார் , விசாரணை நடத்தி,  தேவி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் தேவி உடலை கைப்பற்றிய போது, அவர்,  தனது வயிற்றில், பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி இருந்தார். அதில் தனது சாவுக்கு கணவர், மாமனார் பிச்சையன், மாமியார் வசந்தா ஆகியோர் தான் காரணம் என்று எழுதியிருந்தார்.  மேலும், என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்றும், 9 பக்க கடிதம் எழுதி கட்டிலுக்கு அடியில் வைத்திருப்பதாகவும் வயிற்றில்  எழுதி இருந்தார். இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தாய், இரு அண்ணன்களுடன், மகிழ்ச்சியாக இருந்தேன். திருமணமானது. காலப்போக்கில், தனது கணவருக்கு, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனது, கணவர் வீட்டில், எனக்கு ஒரு வேளை தான் சாப்பாடு போடுவார்கள். அதிகாலையே எழுந்து, வீட்டு வேலை செய்வேன். இந்த கொடுமை எல்லாம், என் கணவர் மற்றும் வீட்டில் சொன்னதில்லை என உருக்கமாக கடிதம் எழுதிய தேவி, தனது மரண வாக்குமூலத்தை, வீடியோ எடுத்து, அதை, தனது அண்ணன்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, டார்வின், அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here