Home தலையங்கம் அதிகரித்துவரும் தற்கொலைகள்

அதிகரித்துவரும் தற்கொலைகள்

43
0
SHARE

அ ன்றாடவாழ்க்கையில் நாம் பழகிப்போன நிகழ்ச்சியில் தற்கொலையும் ஒன்றாய் மாறிப்போனது. உண்மையில் அது சரிதானா?எப்போதாவது தற்கொலை செய்பவர்களை பற்றி யோசித்திருக்கிறோமா?. அவரவர் வேலைகள் தான் அவரவர்க்குமுக்கியம், ஆனால் நாம் வாழ்வது ஒன்றும் தனிநபருக்கான உலகமல்ல, ஒற்றுமையோடு ஒருங்கிணைந்த சமுதாயம்.

இங்கு சமுதாயஅக்கறையின்றி வாழ்பவர்கள், இந்த தலைமுறையில் மனிதர்களாக தவறி பிறந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.தற்கொலை யார் செய்கிறார்கள், எந்த வயதினர் என்ற பாகுபாடே இன்று இல்லை, பிறந்த, பிறக்கும் குழந்தையை தவிரஅனைவரும் தற்கொலையை பிரச்சனையின் முடிவாக்கி முடிவில்லா வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். இதற்கானகாரணங்களில் மிக முக்கியமானது இந்த சமுதாயம் தான். தற்கொலைஎன்பது பிரச்சனையின் உச்சத்தில் இருக்கும் போது தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த தெரியாமல்,உயிரைமாய்த்துக்கொள்வதாகும்.

உயிருள்ள அனைத்துப்பொருள்களுக்கும் உணர்வுகள் இருக்கத்தான் செய்யும். மரம், செடி,விலங்குகள் மனிதன் என இதில் எல்லாம் அடங்கும். மரங்களுக்கு இலையுதிர்காலமும், வானத்திற்கு கருமேகமும், விலங்களுக்குகதறல்களும், மனிதனுக்கு கண்ணீரும் உணர்வின் வெளிப்பாடாக அமைகிறது. ஆனால் மனிதனை தவிர எதுவும் தன்னை தானேஅழித்துக்கொள்வதில்லை, பிறரையும் அழிவிற்கு தூண்டுவதில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் மிகுந்த மன உளைச்சல்களுக்குதள்ளப்படுபவர்கள் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த நிலை இன்று மாறிவிட்டது, அப்படியானால் தற்கொலைகுறைந்திருக்கிறதா? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

தற்கொலைகள் இப்போது  அதிகரித்திருக்கிறது. இணையம் என்பதே உலக நடப்புகளை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று இணைய விளையாட்டுகளால் பலர் தற்கொலைசெய்து கொள்கின்றனர், இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம், பிள்ளைகளின் மீது கவனக்குறைவு. விளையாட்டுக்காக சிலர்தற்கொலை செய்துகொள்ள, இன்னும் சிலர் பகுத்தறிவை வழங்கும் கல்விக்காக தற்கொலை செய்துகொள்கின்றனர். தற்கொலைஎப்படி இதற்கு தீர்வாகும். படிப்பு என்பதற்கே பலருக்கு கற்றுக்கொடுக்கத்தான், ஆனால் அவர்களே தவறான விதையைவிதைத்து செல்வது வருந்தத்தக்கது.எந்தவொருபிரச்சனையானாலும் அதன் இறுதி வரை சென்று தீர்வை கண்டுபிடிப்பதுதான் விடாமுயற்சி, அதில் வெற்றி தோல்வி என்பது இறுதிபடிக்கட்டல்ல, அப்படியே இருந்தாலும் அது ஒன்றும் மலை உச்சி அல்ல, சமதளம் தான்.

மறுமுறை முயன்று பார்ப்பதுதவறல்லவே. இதற்கெல்லாம் முக்கிய காரணம் எல்லோரும் தனித்து வாழ்வதுதான், தனியே இருக்கும் நம் உணர்வுகள்உச்சத்தில் யோசிக்கும் அது சரியா? தவறா? என்பதை மறந்துவிடும். இதற்காகத்தான் அந்த காலத்தில் கூட்டுக்குடும்பமாகவாழ்ந்துவந்தனர். ஆனால் இன்று வீட்டுக்குள்ளேயே தனித்தனி அறைகள், இந்த சூழல் மாற வேண்டும். அப்போதுதான்தற்கொலைகள் குறைக்கப்படும். எப்போதும் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் இருப்பவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது மிகக்குறைவு.இப்படிஆண்டுதோறும் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்க வழியில்லாமலா இருக்கும், கண்டிப்பாக இருக்கிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எப்போதுமே தனிமையில் இருக்காமல் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட வேண்டும்.பெற்றோர்கள் குழந்தைகளை சிறு வயதிலேயே நல்லமுறையில் வழிநடத்தவேண்டும். உலகின் கண்ணாடியாக இருக்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தற்கொலைகளை தன் விளம்பரத்திற்காக பயன்படுத்தாமல், உணர்வுப்பூர்வமாக பார்ப்பது மிகவும் நல்லது. ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்தக் காட்சியை பல முறை ஒளிபரப்புவதை நிறுத்தவேண்டும், அதன் மூலம்தற்கொலை தூண்டப்படுவது குறைக்கப்படும். தற்கொலை ஒன்றும் கொண்டாடப்பட வேண்டியது அல்ல, அது செய்பவர்களை விடதூண்டுபவர்களுக்கு தான் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனால் முடிந்த வரையில் எல்லோருக்கும் உபயோகமாக வாழ்ந்துவிட்டு இறப்பது, நம் வாழ்விற்கு சிறப்பு