Home தமிழகம் பாலியல்கல்விக்கு மேலும் விழிப்புணர்வு அவசியம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் வலியுறுத்தல்

பாலியல்கல்விக்கு மேலும் விழிப்புணர்வு அவசியம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் வலியுறுத்தல்

83
0
SHARE

சென்னை, செப்.8

பாலியல் கல்விக்கு மேலும் விழிப்புணர்வு அவசியம் தேவை என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.துரைசாமி கூறினார்.

சர்வதேச பாலியல் தினத்தையட்டி சென்னையில் நேற்று மனிதச்சங்கிலி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனை, உலக பாலியல் சங்கத்தின் உதவியோடும் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை மற்றும் உளவியல் துறையின் ஆதரவோடும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச பாலியல் தினவிழாவை நேற்று  நடத்தியது.சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலியில் உலக பாலியல்சங்கத்தின் மீடியா கமிட்டி துணை தலைவர் டாக்டர்.கே.எஸ்.ஜெயராணி காமராஜ்,பாலியல் உரிமைக்குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ், சென்னை பல்கலைக்கழகமானுடவியல் துறை தலைவர் எஸ்.சுமதி, உளவியல் துறை பேராசிரியர் சுவாமிநாதன்உள்பட பல பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாகபங்கேற்றனர்.இதனைத்தொடர்ந்து நடந்த கருத்தரங்கை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்டாக்டர் பி.துரைசாமி துவக்கிவைத்து உரையாற்றினார். அப்போது Ôபாலியல்துறையில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எச்..வி.போன்றஉயிர்க்கொல்லி நோய்களின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும் இன்னும்இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளைஉருவாக்க முடியும். பாலியல் கல்விக்கு மேலும் விழிப்புணர்வு அவசியம் தேவைÕ என்று அவர் கூறினார்.கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர் அருள்மொழி மாநாட்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர்பேசியதாவது:விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்து குவிந்துகொண்டு இருக்கிறது.ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விவாகரத்து கேட்பதற்கான காரணம் வேறுபடுகிறது.1990ம் ஆண்டுகளில் வரதட்சணை கொடுமையால் தான் அதிகம் இருந்தது. 2000ம்ஆண்டுக்கு பிறகு தாம்பத்திய உறவு சிக்கல்களினால் விவாகரத்து எண்ணிக்கைஅதிகரிக்கிறது. மானுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பாலியல் கல்விஅவசியமாகிறது.பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. பெண்கள் மீதுபலவகையில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் அதகரித்து வருகிறது.இவற்றை களைய சமூகத்தில் பாலியல் கல்வி அவசியமாகும் என்று கூறிய அவர்வழக்கறிஞராக தனக்கு ஏற்பட்ட பல சம்பவங்களை விளக்கி கூறினார்.

கருத்தரங்கில் சர்வதேச பாலியல் உரிமை குழுவின் உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ் பேசியதாவது.பாலியல் சமத்துவத்தை மட்டும் வலியுறுத்துவது அல்ல எங்கள் நோக்கம்.அனைவருக்கும் பாலியல் உரிமை பெற்றுத்தருவதே எங்களது நோக்கம் ஆகும்.பாலியல் கல்வி இல்லாதது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.64 சதவீதபெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அதே போல் 55சதவீத ஆண் குழந்தைகளும் இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.காதல் உயர்வானது. ஆனால், காதலிப்பவர்களை ஆணவக்கொலை செய்வது சமீபகாலமாகஅதிகரித்து வருகிறது. மேல் நாடுகளில் பெண்களுக்கு விரும்பியே சிலகொடுமைகளை செய்கிறார்கள். அதுவும் ஆப்பிரிக்க நாடுகளில் இளம் பெண்களுக்குஅவர்களுடைய தாய்மார்களே கொடுமைகளை அரங்கேற்றுகிறார்கள்.

நாங்கள் உலக அளவில் பெண்களின் உரிமைக்காகவும், பாலியல் சமத்துவத்திற்காகவும் பணியாற்றி வருகிறோம். சென்னை பல்கலைக்கழகத்தோடு இணைந்து இந்த கருத்தரங்கை இங்கு நடத்துவதில் பெருமைப்படுகிறோம்.

இவ்வாறு டாக்டர் டி.காமராஜ் கூறினார்.டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் பேசும்போது, முந்தைய காலங்களில் கணவர்கள்சற்று வயது அதிகமானவர்களாகவும், அவரது வருமானத்தை நம்பியே குடும்ப சூழல்இருந்தது. மனைவி சற்று இளைய வயதினராக இருப்பார்கள். எனவே அந்த குடும்பஅமைப்பு சீராக இருந்தது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என தம்பதியர் இருவரும் ஒத்த வயதுடையவராகவும், இருவருமே வருமானம் ஈட்டக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை போய் விடுகிறது. எனவே, இந்த சூழலில் தம்பதியர் தங்களது வாழ்க்கை முறையை மேம்படுத்துக்கொள்ள அன்பு, பிணைப்பு மற்றும் நெருக்கம் ஆகியவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

விழாவின் துவக்கத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை தலைவர் சுமதி வரவேற்றார். முடிவில் உளவியல் துறை துணை பேராசிரியர் தாமோதரன் நன்றி கூறினார்.