Home சினிமா ஜோதிகா படக்குழுவினர் வைக்கும் பரிசு போட்டி

ஜோதிகா படக்குழுவினர் வைக்கும் பரிசு போட்டி

10
0
SHARE

மகளிர் மட்டும்வருகிற செப்டம்பர் 15&ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய தேசிய விருது இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கிறார். இதில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன், ஷோபனா கார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்த தயாரித்திருக்கிறது.

படம் ரிலீசுக்கு தயார்  நிலையில் இருக்க, `மகளிர் மட்டும்படக்குழு போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறது. பொதுவாக `மகளிர் மட்டும்என்றாலே பெண்கள் மட்டும் பங்கேற்பார்கள். ஆனால் இதில் ஆண்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும்.`நான் கொண்டாடும் பெண்என்ற தலைப்பில் நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி அவர்களை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்ற நான்கு வரிகளும் அந்த பெண்ணுடனான உங்கள் செல்பியையும் அனுப்புங்கள். அவர் உங்கள் அம்மாவாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ, மனைவியாகவோ, காதலியாகவோ  அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து அந்த பெண்மணியை நாங்களும் கொண்டாடுகிறோம் என்று கூறி போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்குகிறது படக்குழு.

தாய்லாந்து காடுகளில் கும்கி 2 படம்

ஒரு படம் வெற்றி பெற்றவுடன் அதன் இரண்டாம் பாகம் எடுப்பது என்பது கோடம்பாக்கத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. பிரபு சாலமனின் கும்கி படம்வெற்றியை தொடர்ந்து அவர் அதன் இரண்டாம்பாகத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் லிங்குசாமியின் மருமகன் மதியும் ஷிவானியும் நடித்து வருகிறார்கள்.

கும்கி 2’ படத்துக்காக படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வந்த படக்குழு, தாய்லாந்தை தேர்வு செய்து அங்கு முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. தாய்லாந்து நிறைய யானைகள் உலவும் இடம் என்பதால், அங்கு படத்தின் பிரதான காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் பிரபுசாலமன்.

இதன் நாயகனாக லிங்குசாமியின் மருமகன் மதியும், நாயகியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை பென் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here