Home சம்பவம் சென்னை காசிமேட்டில் 500 விசைப்படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம் 30...

சென்னை காசிமேட்டில் 500 விசைப்படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம் 30 ஆயிரம் பேர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

9
0
SHARE

சென்னை, செப். 8& சென்னை காசிமேட்டில 500 வசைப்படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். 30 ஆயிரம் பேர் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லைதமிழக அரசாணையை மீறி, அதிக குதிரை திறன் கொண்ட என்ஜினை படகுகளில் பொருத்தி , மீன் பிடிப்பதை கண்டித்து,  மீனவர்கள் கடல் மறியலில் ஈடுபட்டும்,  விசைப்படகுகளில் கருப்பு கொடி ஏந்தியும்  வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர்.

தமிழக அரசாணைப்படி, 200 குதிரை திறன் கொண்ட மோட்டார் என்ஜினை பயன்படுத்தி தான், விசைப்படகுகளில் மீன் பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால்,  அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் என்ஜினை பயன்படுத்தி, சிலர் மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி, நேற்று, காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில், மீனவர்கள் கடல் நடுவே, விசைப்படகுகளை நிறுத்தி மறியல் போராட்டம் செய்ததோடு, கருப்புகொடி ஏந்தி, வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதனால், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நடுக்கடலில், நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.  இது குறித்து, விசைப்படகு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜேஷ், தலைவர் ஜி.அரசு, பொருளாளர் எழிலரசு ஆகியோர் கூட்டாக  கூறும்போது; தமிழக அரசாணையை மீறி, கேரளாவை சேர்ந்த ஜெகன் உட்பட  3பேர், 450 குதிரை திறன் கொண்ட மோட்டார் என்ஜினை விசைப்படகுகளில் பொருத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மீன் வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அலட்சியம் காட்டுகின்றனர். ஜெகன் என்பவர் அரசாங்கத்தை கையில் வைத்திருப்பது போல் பேசுகிறார்.  அதிக குதிரை திறன் மோட்டார் என்ஜின் பொருத்துவதால்,  பவள பாறைகள் அழிந்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் அரசு என கூறுபவர்கள், நீட் தேர்வில் இருந்து மீனவர்கள் பிரச்சினை வரையில் அனைத்தும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.   அரசாணையை மீறி, செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,  விசைப்படகுளில், கருப்பு கொடி ஏந்தி, கடல் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். தமிழக அரசு , இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here