Home சம்பவம் காசோலை மோசடி வழக்கு இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்ட் கோர்ட்டு உத்தரவு 

காசோலை மோசடி வழக்கு இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்ட் கோர்ட்டு உத்தரவு 

13
0
SHARE

பரமக்குடி, செப். 8& ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ரகு என்பரிடம், திரைப்பட இயக்குனர் சேரன் திரைப்பட சி.டி.க்களை விற்பனை செய்யும் உரிமம் வழங்குவதற்காக ரூ.1 லட்சத்து 80ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி சி.டி.க்கள் விற்பனை செய்யும் உரிமம் வழங்கவில்லை. இதானல் ரகு, தான் கொடுத்த பணத்திற்கு திரும்ப கேட்டுள்ளார்.

அதற்கு சேரன், பணத்திற்கு பதிலாக காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த காசோலையை ரகு வங்கியில் செலுத்தியபோது, அதில் பணம் இல்லை என்று திரும்பிவிட்டதுஇதனால் தன்னிடம் காசோலை மோசடி செய்துவிட்டதாக சேரன் மீது பரமக்குடி குற்றவியல் கோர்ட்டில் ரகு வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்காக ஆஜாரக உத்தரவிட்டும், தொடர்ந்து சேரன் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் வழக்கு நீதிபதி பிரசாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.