Home சம்பவம் தமிழகம் முழுவதும் நாளை, ‘நீட்’ சட்ட நகல் எரிப்பு போராட்டம் திருமாவளவன் அறிவிப்பு 

தமிழகம் முழுவதும் நாளை, ‘நீட்’ சட்ட நகல் எரிப்பு போராட்டம் திருமாவளவன் அறிவிப்பு 

20
0
SHARE

சென்னை, செப். 8& விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய & மாநில அரசுகளை கண்டித்தும், நீட் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் 9&ந் தேதி தமிழகம் முழுவது மாவட்ட தலைநகரங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. ‘நீட்தேர்வு ரத்தாகும் அல்லது ஓராண்டுக்கு விலக்கு கிடைக்கும் என்ற போலியான நம்பிக்கையை தமிழக அரசு மாணவர்கள் இடையே வளர்த்துவிட்டது. கடைசியில் தமிழக மாணவர்களை மத்திய & மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டன. எனவே, தமிழகத்துக்கு துரோகம் இழைத்த அரசுகளைக் கண்டித்தும், ‘நீட்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்நீட்சட்ட எரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாராத மாணவ & மாணவிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.