Home தமிழகம் அடுத்த ஆண்டு முதல் ஏற்காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிகள் தொடங்கப்படும்முதல்வர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் ஏற்காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிகள் தொடங்கப்படும்முதல்வர் அறிவிப்பு

22
0
SHARE

சென்னை மே 13&

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்ற  43வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி தொடக்க விழாவில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.

இந்த கோடை விழா கண்காட்சி மகிழ்வதற்கு மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கைக்கு

அடித்தளமாகவும் அமைகின்றது. அதுமட்டுமல்ல, நம்முடைய  விவசாயிகள் அதிக

மகசூல் பெறவேண்டுமென்பதற்காக நம்முடைய தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத்துறை இரண்டும் இணைந்து, பல்வேறு உத்திகளை நமக்கு கண்காட்சியாக வைத்திருக்கின்றார்கள். அதைப் பார்த்து, விஞ்ஞானப்பூர்வமாக விவசாயப் பணிகளை மேற்கொண்டால் அந்த விவசாயிகள் பயிரிடுகின்றபொழுது அதிக லாபத்தை, அதிக விளைச்சலை பெறமுடியும். அதுமட்டுமல்ல, எல்லாத் துறையிலும் நாம் கண்டுள்ள வளர்ச்சியை, அரசு மக்களுக்கு வழங்குகின்ற திட்டங்களை, அரசின் செயல்பாட்டினை இந்த அரங்குகள் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். ஏற்காடு மலைவாழ் மக்கள், ஏழை மக்கள், அன்றாடம் உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்ற நிலையில் வாழ்கின்ற மக்கள். அவர்களுக்கு  தேவையான உதவிகள் செய்துதர வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இங்கே பட்டா வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார்கள். சட்டப்படி, யாருக்கெல்லாம் வழங்க முடியுமோ அவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு அரசு முன்வரும். மலைவாழ் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை  அரசு கனிவோடு பரிசீலித்து ஏற்காடு மலையிலும் பள்ளி அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்  நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களின் குழந்தைகள் அங்கேயே தங்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளி கட்டிக் கொடுக்கப்படும். அந்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கித் தரப்படும். அதேபோல, கருமந்துறையிலும் அடுத்த ஆண்டு முதல் பள்ளி ஒன்று அமைத்துக் கொடுக்கப்படும்.

மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, கருமந்துறையில் இரண்டு மினி பஸ்களும், ஏற்காடு மலையில் இரண்டு மினி பஸ்களும் இயக்கப்படும். நம்முடைய தமிழகத்தில் 20 மாவட்டங்கள் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியாக கண்டறியப்பட்டிருக்கின்றன. அவர்களின்அடிப்படை தேவைகளான, சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, கல்வி வசதி போன்ற பல்வேறு வகையான வசதிகளை நிறைவேற்றித் தருவதற்காக அம்மாவினுடைய அரசு தனி கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசிடமிருந்து சில நிதியுதவி கிடைக்கின்றது. அந்த நிதியுதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், அரசு மலைவாழ் மக்களின் நலன் கருதி நான் குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும்.

நான் தனியே எந்த முடிவும் எடுக்காமல், ஒரு திட்டத்தை எப்படி செயல்படுத்தினால் சிறக்கும் என்று மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துபேசி, முடிவெடுத்துதான் அந்த திட்டத்தை நான் அறிவிக்கின்றேன். பலரோடு பேசுகின்றபொழுதுதான் அந்தத் திட்டம் சிறக்கும். ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். அவற்றை உள்வாங்கி, ஒருமித்த கருத்தோடு, திட்டத்தை வகுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அப்படித்தான்  அரசு இன்றைக்கு வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது.இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here