Home மற்றவை ” டிப்ளமோ நர்சிங்” படிப்பு, பட்டப் படிப்பாக மாற்றப்படும் :தமிழ்நாட்டில் செவிலியர் பல்கலைக்கழகம்மத்திய அரசுக்கு பரிந்துரை...

” டிப்ளமோ நர்சிங்” படிப்பு, பட்டப் படிப்பாக மாற்றப்படும் :தமிழ்நாட்டில் செவிலியர் பல்கலைக்கழகம்மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய ஆளுனர் உறுதி

15
0
SHARE

சென்னை, மே 13&

தமிழக சுகாதாரத் துறை சார்பில் உலக செவிலியர் தினக் கொண்டாட்டம் சென்னை கிண்டி யில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தவிழாவில்கடந்த 2017ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய 251 செவிலியர்களுக்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை வழங்கிய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிகழ்ச்சியில் பேசியதாவது :

சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. மருத் துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இதுவரை 9,533 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் படிப்படி யாக நிரந்தர செவிலியராக ஆக்கப்படுவார்கள். ஒப்பந்த பணியிலிருந்து நிரந்தரப் பணி செவிலியராக 7,030 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு கூடுதலாக புதிய செவிலியர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு, பணி நியமனம் நடை பெறும். தற்போதுள்ள டிப்ளமோ நர்சிங் படிப்பை, டிகிரி படிப்பாக மாற்றி, செவிலியர் பல்கலைக் கழகத்தை தொடங்க நடவடிக்கை  எடுக்கப்படும். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆலோசிக்கப்படும். சீருடையை மாற்ற வேண்டும் என்று செவிலியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விரை வில் அவர்களின் விருப்பப்படி சீருடை மாற்றப்படும்என்றார்.

இந்த விழாவில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாடு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் இன்பசேகரன், மருத்துவக் கல்வி இயக்கு நர் எட்வின்ஜோ, பொது சுகாதா ரம், நோய் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மோகனன், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

இதுகுறித்து ஆளுனர் பன்வாரி லால் புரோகித் கூறுகையில், தமிழக செவிலியர்களின் சேவையை பாராட்டினார். சென்னையில் ஆண்டு?க்கு 15,000 செவிலியர்கள் பயிற்சி பெறுகிறார்கள். இவர்கள் உலகம் முழுவதிலும் சென்று பணியாற்றும் திறமை கொண்டவர்களாக திகழ்கிறார்கள்என பாராட்டு தெரிவித்தார். தமிழ் நாட்டில் செவிலியர் பல்கலை கழகம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தயாராக இருப்பதாகவும் ஆளுனர் தெரிவித்தார். “தமிழ் நாட்டில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது., இதில் டிப்ளமோ நர்சிங் படிப்பை, பட்ட படிப்பாக மாற்றி கல்வி கற்பிக்கப்படும்என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் பேசியுள்ளார். இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுனர் பன்வாரி லால் புரோகித்தமிழ் நாட்டில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வேன்என்று உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here