Home சுடச்சுட பசுபதிநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

பசுபதிநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

17
0
SHARE

காத்மாண்டு மே. 13&

நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

நேபாளம் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம்  ஜனக்புரியில் உள்ள சீதை கோயிலில் வழிபாடு செய்தார். நேற்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த  இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.

பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.

நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தாவை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பிலும் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் டெல்லிக்கு புறப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here