Home விளையாட்டு விலாரியலை 5&1 என வீழ்த்தி சாதனையை நீட்டிக்கொண்டே செல்லும் பார்சிலோனா

விலாரியலை 5&1 என வீழ்த்தி சாதனையை நீட்டிக்கொண்டே செல்லும் பார்சிலோனா

20
0
SHARE

மாட்ரிட், மே 11&

லா லிகாவில் விலாரியலை 5&1 என வீழ்த்தி தோற்கடிக்க முடியாத அணி என்ற சாதனையை நீட்டிக் கொண்டே செல்கிறது பார்சிலோனா.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக்கில் பார்சிலோனா சிறப்பாக விளையாடி ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.

பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் 36வது ஆட்டத்தில் விலாரியல் அணியை எதிர்கொண்டது. இதில் பார்சிலோனா 5&1 என வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பிலிப்பே கவுட்டினோ, 16வது நிமிடத்தில் பவுலினோ, 45வது நிமிடத்தில் மெஸ்சி, 87 மற்றும் 93வது நிமிடத்தில் ஓஸ்மானே டெம்பேல் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தனர். விலாரியல் அணியின் சான்சோனே 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா 2017&18 சீசனில் லா லிகாவில் 36 போட்டிகளில் விளையாடி 27 வெற்றி, 9 டிராவுடன் 9&0 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.  ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் அனைத்து லீக் போட்டிகளையும் கணக்கில் எடுத்ததுக் கொண்டால், தோல்வியடையாத ஒரே அணி இதுதான்.

மீதமுள்ளஇரண்டுபோட்டிகளிலும்தோல்வியைசந்திக்காமல்இருந்தால்தோற்கடிக்கமுடியாதஅணிஎன்றசாதனையைபார்சிலோனாசொந்தமாக்கும். லா லிகாவில் அட்லெடிகோ டி மாட்ரிட் 7&5 புள்ளிகளடன் 2வது இடத்திலும், ரியல்மாட்ரிட் 7&2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here