Home விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஜிந்தர் பால் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஜிந்தர் பால் காலமானார்

20
0
SHARE

புதுடெல்லி, மே 11&

இந்திய டெஸ்ட் அணிக்காக ஒரேயரு போட்டியில் விளையாடிய முன்னாள் வீரர் ரஜிந்தர் பால் காலமானார்.

இங்கிலாந்து அணி கடந்த 1963&64ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது.

அப்போது மும்பையில் நடைபெற்ற டெஸ்டில் ரஜிந்தர் பால் அறிமுகமானார். வலது கை மிக வேகப்பந்து வீச்சாளரான இவர், முதல் இன்னிங்சில் 11 ஓவர்கள் வீசி 19 ரன்களும், 2வது இன்னிங்சில் 2 ஓவர்கள் வீச 3 ரன்களும் விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் அடுத்த போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ராமகந்த் தேசாய் சேர்க்கப்பட்டார்.

80 வயதாகும் இவர் டேராடூனில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலமானதாக அவரது இளைய சகோதரர் ரபிந்தர் பால் கூறியுள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சர்வதேச போட்டியில் அதிக வாய்ப்பு கிடைக்காத போதிலும், முதல்தர போட்டியில் 337 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

23 முறை ஐந்து விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், தெற்கு பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here