Home மற்றவை உத்தரபிரதேசத்தில் புழுதி புயலுக்கு 12 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் புழுதி புயலுக்கு 12 பேர் பலி

20
0
SHARE

லக்னோ, மே 11&

உத்தர பிரதேசத்தில்  புழுதி புயலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர்.  உத்தர பிரதேசத்தில் கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கனமழையுடன் கூடிய புழுதி புயல் வீசியது

இந்த சம்பவத்தினால் பல இடங்களில் வீடுகள் இடிந்தன.  மின்கம்பங்கள் சாய்ந்தன.  மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.  இதில் 45 பேர் பலியாகி உள்ளனர்.  38 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதில் ஆக்ரா நகர் அதிக பாதிப்பிற்கு உள்ளானது.  அங்கு 36 பேர் வரை பலியாகினர்.

இதேபோன்று ராஜஸ்தானிலும் கனமழை மற்றும் அதிதீவிர புழுதி புயல் வீசியது.  இதனால் பரத்பூர் பகுதியில் 12 பேர், தோல்பூர் பகுதியில் 10 பேர் மற்றும் ஆல்வார் பகுதியில் 5 பேர் என மொத்தம் 27 பேர் பலியாகினர்.  100 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் 20 பேர் ஆல்வார், 32 பேர் பரத்பூர் மற்றும் 50 பேர் தோல்பூர் பகுதியை சேர்ந்தவர்கள்.

புழுதி புயலால் 5 மாநிலங்களில் மொத்தம் 134 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட இடி, மின்னலுடன் கூடிய புழுதி புயலால் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் 12 பேர் வரை பலியாகி உள்ளனர்.

அவர்களில் 4 பேர் இடாவா, 3 பேர் மதுரா மற்றும் ஆக்ரா, அலிகார், பிரோஜாபாத்  மற்றும் கான்பூர் கிராமம் ஆகிய 4 பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர் என தகவல் துறை முதன்மை செயலாளர் அவஸ்தி கூறியுள்ளார்.

ஹத்ராஸ்பகுதியிலும்ஒருவர்பலியாகிஉள்ளார்எனபோலீசார்கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here