Home சுடச்சுட சோனியா மீதான மோடியின் தனி மனித தாக்குதலுக்கு பதிலளிக்க விரும்பவில்லைராகுல்காந்தி பேச்சு

சோனியா மீதான மோடியின் தனி மனித தாக்குதலுக்கு பதிலளிக்க விரும்பவில்லைராகுல்காந்தி பேச்சு

9
0
SHARE

பெங்களூரு, மே 11&

சோனியா காந்தியின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் தனி மனித தாக்குதல்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிரசாரத்தின் கடைசி நாளான  நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

எனது தாய் இத்தாலி நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் அவரது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்தியாவில் செலவழித்துள்ளார். இந்தியாவிற்காக தியாகங்களையும் பல போராட்டங்களையும் சந்தித்தவர் அவர். பிரதமர் மோடி எனது தாயின் மீது தனிமனித தாக்குதல் நடத்துவதன் மூலம் அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார் எனில் அவர் அதை தொடர்ந்து செய்யட்டும்என அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி என்னை பற்றி விமர்சனம் செய்வது இளைஞர்களை அவமதிக்கும் செயலாகும். பிரதமருக்கு அனைவரின் மீதும் கோபம் உள்ளது. ஆனால் அந்த கோபத்தை கவர்ந்து இழுக்கும் மின்னல் கம்பியை போன்றவன் நான்என ராகுல் காந்தி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here