Home தமிழகம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மாட்டினமான காங்கேயம், பர்கூர், புலிக்குளம் ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கைஅமைச்சர்...

தமிழ்நாட்டின் பாரம்பரிய மாட்டினமான காங்கேயம், பர்கூர், புலிக்குளம் ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கைஅமைச்சர் வேண்டுகோள்

14
0
SHARE

சென்னை, மே 11&

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க மாட்டினங்களான   காங்கேயம், பர்கூர் மற்றும் புலிக்குளம் ஆகிய இன மாடுகளையும், நாட்டினக் கோழிகளையும் அதிக அளவில் உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தைக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர்  பாண்டியராஜன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலர்   கோபால்,   மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர்  சி.பாலசந்திரன் ஆகியோரும் ஆய்வின்போது உடனிருந்தார்கள்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத் தளத்தை பார்வையிட்டு, அதிலுள்ள தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்,    மத்திய உயிர் தொழில் நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியால் 2011 ல் உருவாக்கப்பட்டுள்ள தனித்தன்மை வாய்ந்த ஆராய்ச்சிக் கூடமாக விளங்கி வருகிறது.  கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளத்தின் மூலம் எளிமையான முறையில் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாகத் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதனை நேரடியாகச் சந்தைப்படுத்துவதாகும்.

இந்த பரிமாற்றத் தளம் துவக்கத்தில் மத்திய அரசின் தொழில்நுட்பவியல் துறையின் ரூ. 2293.77  லட்சங்கள் நிதியுதவியுடனும், பின்னர் 2017 முதல் 2020 வரைக்கும் ரூ.1077.47  லட்சங்களுடனும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் மூலம் டீட் ப்ராடக்ட்   மற்றும் சொமாட்டிக் செல் கலன்  போன்றவை மடி அழற்சி நோயிலிருந்து பால் தரும் மாடுகளை பாதுகாக்கப் பயன்படுகிறது. ப்ரூ அலர்ட், மனிதன் மற்றும் விலங்கினங்களில் வரும் ப்ருசெல்லா  கருசிதைவு நோயை கண்டறிய உதவுகிறது.

புரோஜெஸ்ட்ரான் நானோ ஓட்டும் பட்டை , பசை  மாடுகளில் சினைக்கு தயார்படுத்தும் ஊக்கமூட்டியாக பயன்படுகிறது.  நானோ அயோடின்    நானோ முறையில் மேம்படுத்தப்பட்ட அயோடினை கொண்ட நுண்ணுயிரி எதிர்ப்பு கரைசல் என்பதாகும்.

இந்தஆராய்ச்சிநிறுவனம்தன்னுடைய 10  தொழில் நுட்பங்களை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்துள்ளது

இந்த ஆய்வகம்  தனித்தன்மையுடன் கூடிய நேர்மறையான எவ்வித அசுத்தங்களும் நுழையமுடியாத வகையில்   உருவாக்கப்பட்டுள்ளது.

இது இந்திய அளவில் எந்த வேறு எந்தக் கல்வி நிறுவனத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிமாற்றத் தளத்தில் கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள் தமிழகத்தின் கால்நடை மற்றும் கோழி பண்ணையாளர்களை விரைவில் சென்றடைய ஆவண செய்ய பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு  அமைச்சர் அறிவுறுத்தினார்.

பின்னர், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும், பல்கலைக்கழகத்தில் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கோழியினங்கள் ஆகியவை தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாகக் கால்நடை மற்றும் கோழி பண்ணையாளர்களை விரைவாகச் சென்றடைய போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.

இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்கும் மற்றும் கிராமப்புற பண்ணையாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, கிராமப்புற பண்ணையாளர்களுக்குத் தேவையான இடுபொருட்களையும் தொழில்நுட்பங்களையும்  சிறப்பாக வழங்கிட ஆவண செய்யவும் அறிவுறுத்தினர்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க மாட்டினங்கள் குறிப்பாகக் காங்கேயம், பர்கூர் மற்றும் புலிக்குளம் ஆகிய இன மாடுகளையும் மற்றும் நாட்டினக் கோழிகளையும் அதிக அளவில் உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு,

அதைப்பண்ணையாளர்களுக்குசென்றடையஉரியநடவடிக்கைகளைமேற்கொள்ளஅமைச்சர்உடுமலைராதாகிருஷ்ணன்அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here