Home சுடச்சுட திண்டிவனம் அருகே நீட்தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை

திண்டிவனம் அருகே நீட்தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை

28
0
SHARE

விழுப்புரம், செப். 8& திண்டிவனம் அருகே நீட் தேர்வை எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பள்ளி ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டு தனது வேலையை ராஜினாமா செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வைரபுரம் கிராமத்தில் உள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அங்கு சபரிமாலா என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தான் பணிபுரியும் பள்ளிக்கு நேற்று முன் தினம் வந்து அதே பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் தனது மகன் ஜெயசோஷனுடன் காலை முதல் வகுப்பிற்கு செல்லாமல் பணியை புறக்கணித்தார். பின்னர் பள்ளியின் முன் அமர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருந்தார்.

தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை காவலதுறையினர் விரைந்து வந்து அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் சபரிமாலா நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவகம் வந்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் தனது அரசு பணியான ஆசிரியர் பணியிலிருந்து தான் விலகி கொள்வதாக கடிதம் அளித்தார். ஒரு பெண் அரசு ஆசிரியர் நீட் தேர்வை எதிர்த்தும், நாடு முழுவதும் ஒரே கல்வி திட்த்தை வலியுறுத்தியும் தனது அரசு பணியை துறந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.