Home அரசியல் உலக அளவில் மாணவர்களுக்கு ‘மடிக்கணினிவழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான்’ கல்லூரி விழாவில் முதல்வர்...

உலக அளவில் மாணவர்களுக்கு ‘மடிக்கணினிவழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான்’ கல்லூரி விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு

34
0
SHARE

தூத்துக்குடி, செப்.8& உலக அளவில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று கல்லூரி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

தூத்துக்குடிமாவட்டம், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரி தன்னாட்சி கல்லூரியாக உயர்வு பெரும் விழாவை துவக்கி வைக்க மதுரையிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். முதல்வருக்கு எட்டையாபுரம் அருகேயுள்ள சிந்தக்கரையில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

  அதன் பின்பு கார்மூலம்  சாயர்புரம் போப் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரை கல்லூரி முதல்வர் செல்வக்குமார், தூத்துக்குடி  நாசரேத் டயோசிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பின்பு போப் கல்லூரியை  தன்னாட்சி கல்லூரியாக தரம் உயர்த்தி துவக்கி வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பேசியதாவது:&

கர்நாடகாவில்பிறந்துதமிழகத்துக்குவந்து 1948&ம் ஆண்டு சாயர்புரத்தில் சாதாரண பள்ளியை துவக்கிய போப் 1962&ம் ஆண்டு கல்லூரியை துவக்கினார் போப் கல்லூரியில் நடப்பாண்டு 1,850 மாணவ& மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதுவேஉழைப்புக்குஉயர்ந்தசான்றாகும். குறிப்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு இது பெரிதும் உதவுகின்றது. ஒரு பழமொழி உண்டு. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். கல்வி, நல்லொழுக்கம், பணிவு ஆகியவைகள் முக்கியமானதாகும். இதனை கடைபிடித்தால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது.

அம்மாவின்அரசு 2011&ம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்த போது உயர் கல்வி பெரிதும் வளர்ச்சி அடைய வேண்டுமென்ற எண்ணத்தில் அப்போது 21 சதவீதமாக இருந்த உயர்கல்வி முன்னாள் தமிழக முதல்வர் அம்மா எடுத்த நடவடிக்கையால் 44.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி 24.5 சதவீதமாக இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் உயர்கல்வி நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 6 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 4 பொறியியல் கல்லூரி, 14 பாலிடெக்னிக், 21 அரசு கலைக்கல்லூரி உட்பட 65 கல்லூரிகள் துவக்கப்பட்டது.

தரமான கல்வி வேண்டுமென்ற எண்ணத்தில் 100 கோடியில் புதிய திட்டம் தீட்டப்பட்டு அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு பல கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 961 புதிய பாட பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1966 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகின்றது. வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்திற்கு ஏற்றமாதிரி 4 லட்சத்து 71 ஆயிரத்து 850 மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

இதனால்தமிழககிராமத்தில்பிறந்தமாணவ, மாணவிகளின் கையில் கூட மடிக்கணினி உள்ளது. உலக அளவில் மடிக்கணினி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். 2017&2018ம் ஆண்டில் 9 அரசு கல்லூரிகள் துவக்கப்பட உள்ளது. அதன் மூலம் 268 புதிய பாடபிரிவுகள் துவக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டை போற்றும் வகையில் 210 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு துவக்கப்படுகிறது. அதற்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிடம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அரசுஉதவிபெரும்கல்லூரிகளின்வரிசையில்சிறுபான்மைகல்லூரிகளுக்கு 5வருடம் உதவிகள் வழங்கப்படும். 1962&ம் ஆண்டு சாயர்புரத்தில் துவக்கப்பட்ட இந்த கல்லூரி மற்றும் கிராமம், 55 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கல்வி என்பது சாதாரண விஷயம் அல்ல. இறுதி வரை இருக்கும் ஒரே செல்வம் கல்வி செல்வம். 55 ஆண்டுகளில் இந்த கல்லூரி 40 ஆயிரம் பேரை கல்வியாளராக உருவாக்கி உள்ளது. இந்த கல்லூரி இன்று தன்னாட்சி கல்லூரியாக உயர்வு பெற்றுள்ளதை மனதார பாராட்டுகிறேன்இவ்வாறு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் உதயக்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, செய்தி&மக்கள் தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு, பாராளுமன்ற உறுப்பினர்கள் நட்டர்ஜி, பிரபாகர், விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் (பொ) வீரப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்முன்னதாகதமிழகமுதல்வர்எடப்பாடிபழனிசாமியைஅரசுஅதிகாரிகள்வரவேற்றனர்.