Home சிறப்புச் செய்திகள் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்

உடல் பருமனை குறைக்க டிப்ஸ்

9
0
SHARE

நவீன உலகில் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணாமாக பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, ஏராளமானோர் உடல் பருமன் பிரச்ச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு கட்டுப்பாடு இல்லாமல், உடற்பயிற்சி சாலைக்கு சென்று

கடினமான பயிற்சி செய்தல், மூன்று வேளைக்கு பதில் இரண்டு வேளை சாப்பிடுதல், மிகவும் குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ளுதல் (கிரஷ்டயட்) என்பது உள்ளிட்ட செயல்களால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற விபரம் பலருக்கு தெரிவதில்லை.

ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படும் கலோரியை மட்டும் உணவாக எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். தினமும் மூன்று வேளை மிக அதிகளவு உணவு உட்கொள்ளும் முறையை தவிர்த்து, உணவின் அளவை கணிசமாக குறைந்தது, குறித்த கால இடைவெளி விட்டு, அவற்றை ஐந்து வேளையாக மாற்றி உட்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஐந்து இட்லிகளை ஒரு வேளை உண்பதற்கு பதில், இரண்டு வேளை தலா இரண்டு இட்லி வீதம் உட்கொள்ளலாம். இதனால், அதிகமாக உட்கொள்ளும் ஒரு இட்லி மீதமாகும்; உடல் நலம் மேம்படும்.

உடல்பருமனை குறைப்பதற்கு, நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 2,000 கலோரி தேவைப்பட்டால் 1,700 கலோரி அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதாவது தேவையான அளவுக்கு குறைவான கலோரியுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்காக 2,000 கலோரி தேவைபடுபவருக்கு 1,000கலோரி மட்டுமே  உட்கொண்டல் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்படும். மாறாக 1,800, 1,700 என குறைப்பது நல்லது. தேவைப்படும் கலோரிக்கு மிகவும் குறைவாக உட்கொண்டால், உடல் சோர்வு உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகள் எற்பட வாய்ப்புள்ளது.

உடல் பருமன் பிரச்சனைக்கு உணவு கட்டுப்பாடு மட்டுமின்றி, தினமும் நடைப்பயிற்சி உள்ளிட்ட சில எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி சாலைக்கு சென்று கடினமான வெயிட் லிப்டிங் உள்ளிட்ட கடினமான

பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல.

எக்காரணம் கொண்டும் காலை உணவை தவிர்த்து விடக்கூடாது. இரவு ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை உறங்கிய பின், காலை மலம், சிறுநீர் கழித்த பின் வயிறு காலியாக இருக்கும். அதுசமயம் காலை உணவு உட்கொள்வதை தொடர்ந்து பலநாட்கள் தவிர்த்து வந்தால் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்படும்.

காலை எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை விட மதியம் குறைவாகவும், இரவு அதற்கும் குறைவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதியம் மற்றும் இரவு வேளைகள் மிக அதிக அளவு உணவை உட்கொள்வது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். உணவு கட்டுப்பாடு, தினமும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here