Home சிறப்புச் செய்திகள் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்

கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்

20
0
SHARE

பிளாஸ்மா புரதம் வெளியேற்றப்பட்ட பின்னர் தோற்றம் சிறியதாகிவிடும். அதாவது சாதாரண நிலைக்கு வந்துவிடும். கல்லீரலில்தான் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் சேமித்து வைக்கப்படுகின்றன. வைட்டமின் ‘‘ஏ’’ சத்து மிகவும் அதிகளவில் கல்லீரலுக்குள் சேமித்துவைக்கப்படுகிறது. ஏறக்குறைய பத்துமாதங்களுக்கு தேவையான அளவு வைட்டமின் ‘‘டி’’ மற்றும் ‘‘பி&12’’ ஆகியவையும் கல்லீரலுக்குள் சேமிப்பாக இருக்கிறது. வைட்டமின் டி மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை தேவைப்படும் அளவும் வைட்டமின் பி&12 ஒரு வருடத்திற்கு மேலும் தேவைப்படும் அளவும் சேமித்து வைக்கப்படுகிறது.

ரத்தத்தை உறைய வைப்பதில் கல்லீரலின் பணி

ரத்தத்தை உறைய வைப்பதில் கல்லீரல் செய்யும் பணி மிகவும் முக்கியமாகும். ரத்தத்தை உறைய வைக்கத் தேவையான பொருட்களை அதிகமாக கல்லீரலில் உற்பத்தி செய்கிறது. பைப்ரினோஜன், புரோத்ராம்பின், அக்சல் ரேட்டார் குளோபுலின் மற்றும் இவை போன்ற முக்கியமான உறைய வைக்கும் பொருட்கள் கல்லீரலில் உற்பத்தியாகிறது. வைட்டமின் ‘‘கே’’ புரோத்ராம்பின்னைக் கொடுக்கிறது.

இரும்புச்சத்தையும் கல்லீரல் தன்னிடம் கொண்டுள்ளது. ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் என்னும் புரதச்சத்து ஆகிய இரண்டும் இணைந்துள்ளன. நம் உணவிலுள்ள இந்த இரண்டு சத்துகளையும் ‘‘ஹீம் சிந்தட்டேஸ்’’ எனும் என்சைம் இணைந்து ஹீமோகுளோபினை உண்டாக்குகிறது. ஆரோக்கியமாக உடலில் அதிகப்படியாக இருக்கும் இரும்புச்சத்துகள் அனைத்தையும் பெரிட்டின் என்ற பொருளாக மாற்றி கல்லீரல் தன்வசம் சேமித்துக் கொள்ளுகிறது.

கல்லீரல் செல்களில் பெருமளவில் அபொபெரிட்டிங் என்ற புரதம் நிறைந்துள்ளது. இது குறைந்த அளவு அல்லது அதிக அளவில் இரும்புடன் சேர முடியும். இதனால் உடலில் உள்ள நீரில் இந்த அபொபெரிட்டின் என்ற பொருளாக மாறி தேவைப்படும் வரை கல்லீரல் சேமித்து வைக்கப்படுகிறது.

உடலிலுள்ள நீரில் இரும்புச்சத்து குறைந்தால் கல்லீரலில் சேமித்த பெரிட்டினிலிருந்து இரும்புச்சத்து பிரிந்து அந்த நீரோடு சேர்ந்து கொள்கிறது. கல்லீரலை உடலின் மிகப்பெரிய ரசாயன ஆய்வுக்கூடம் என்று சொல்லலாம். கல்லீரல் ஒரு வேதியல் தொழிற்சாலையாகவும் சேமிப்பு கிடங்காகவும், நஞ்சு முறிக்கும் நிலையமாகவும் செயல்படுகின்றது.

மதுவினால் கல்லீரல் அடையும் பெரும்பாதிப்பு

மதுவினால் கல்லீரல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. வயிற்றுக்குள் மது சென்றதுமே வயிற்றின் உட்புறமுள்ள மென்திசுக்கள் அழற்சி அடைகின்றன. மதுவை தொடர்ந்து உட்கொள்ளுவதன் மூலம் வயிற்றில் புண் ஏற்படுகிறது. மதுவின் மூலம் உணவுப் பாதை இயக்க அசைவு மற்றும் சிறுநீர் சுரப்பு விகிதம் சிலமணி நேரம் வரை தளர்வுறுகின்றன.

உடலின் மிகவும் முக்கிய எரிபொருளாக குளுக்கோஸ் என்ற மாவுச்சத்தினைப் புரதப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். இந்தப் பணி கல்லீரலில் தான் நடைபெறுகிறது.

பொதுவாக உணவு வழியே ஏற்கப்படும் மாவுச்சத்து அளவு குறைந்த நிலைகளிலும், எரிபொருள் தேவை வெகுவாக அதிகரித்த நிலையிலும், நம் உடலுக்குத் தேவையான ஒரு பொருளான குளுக்கோஸினை உடல் கல்லீரலில் நடைபெறும் இந்த குளுக்கோஸ் புது உற்பத்தி என வழங்கும் புரதப் பொருட்களிலிருந்து குளுக்கோஸ்  தயாரிப்பு இயக்க மூலமாகப் பெறுகின்றது. தொடர்ந்து மது அருந்தும் நிலைகளில் கல்லீரல் திசுக்கள் பாதிப்படைவதுடன் மேற்கூறிய குளுக்கோஸ் புது உற்பத்தி இயக்கமும் பாதிக்கப்படுகின்றது.

தொடர்ந்து மதுப்பழக்கம் காரணமாக ஏற்படும் கல்லீரல் திசுக்கள் பாதிப்பின் விளைவாக உடலில் முக்கிய புரதப்பொருளான ‘‘அல்புமின்’’ மற்றும் உடலின் இரும்புச்சத்து ஏற்பில் முக்கிய பங்கு வகிக்கின்ற ‘‘ட்ரான்ஸ் பெரின்’’ ஆகிய பொருள்களின் உற்பத்தி சரிகின்றது. உடலின் கொழுப்பு சார்பு புரதப் பொருட்களின் அளவு அதிகரிக்கின்றது.

கல்லீரல் பாதிக்கப்படுவதன் காரணமாக கொழுப்புச்சத்து சார்பு அமிலங்கள் கல்லீரலில் பிராண, வாயுவினை ஏற்று உயிர்பொருள் மாற்றம் காணும், இயக்கமும் பாதிக்கப்படுகின்றது. தொடர்ந்து மது உபயோகித்து வருவதன் விளைவாக கல்லீரல் நுண்ணியங்கள் சிதைவு அடைகின்றன.

கல்லீரல் அழற்சி ஏற்பட்டாலும் நோய்க்கான அறிகுறிகள் உடனுக்குடன் தெரிவதில்லை. திறன் குறைந்த கல்லீரல் சிரைகளில் அதிக அளவு அடர்த்தி மிகுந்த மதுவை ஒரே மூச்சில் உள்ளே அனுப்புவதை தொடர்ந்து கல்லீரல் அழற்சிக்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

அடிக்கடி மது உட்கொள்ளுவதை நிறுத்துவதுடன், நல்ல சத்து நிறைந்த உணவினை உட்கொண்டு வந்தால் நோயின் வீரியத்தை குறைக்க முடியும். இருந்தாலும் மதுப்பழக்கத்தின் காரணாத்தால் கல்லீரல் திசுக்களிடையே பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும்.

கரணை நோய் என வழங்கும் கல்லீரல் நோய் நார்த்திசு நோயாக மாறிய பின்னர் கல்லீரல் திறன் குறைவாக மாறி அதன் பின்னர் மெல்ல மெல்ல மரணத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மதுவும் அதன் முக்கிய உயிர் பொருள் மாறுபாடு பொருளான ‘‘அசிடால்டிஹைடு’’ என்னு வேதியியல் பொருளும் ‘‘ஹெபடோசைட்ஸ்’’ என்னும் கல்லீரல் திசுப்புரதம் பொருளில் பாதிப்புகளைப் பெருமளவில் விளைவிக்கின்றன. மேலும் கல்லீரலின் நுண்ணிய சுவர்களிலும் பாதிப்புகள் உண்டாகின்றன. ரத்தத்தில் கலந்துள்ள மதுவின் அளவு அதிகரித்த நிலையில் உயிர்ப்பொருள் மாற்ற இயக்கம் ஒழுங்காக நடைபெறுவதற்கு அதிக அளவு பிராணவாயு கல்லீரலுக்கு தேவைப்படுகின்றது.

மது மற்றும் அதன் உயிர்பொருள் மாற்ற பொருளான அசிடால்டிஹைடு என்ற வேதியியல் பொருளும் கல்லீரலின் நுண்ணிய சுவர்களை பாதிப்பதன் காரணாமாக இச்சுவர்களின் ஊடுருவுத்திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து மதுப்பழக்கத்துடன் இணைத்துக்காணப்படும் சத்துணவுக்குறைவு, கல்லீரல் திசு பாதிப்பினைத் தீவிரபடுத்துகிறது. பாதிக்கப்பட்ட கல்லீரல் திசு பாதிப்பினைத் தீவிரப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட நோயாளியிடம் சுறுசுறுப்பின்மை சோம்பல் மட்டுமின்றி குமட்டல், பசியின்மை, உடல் எடைகுறைவு போன்றவைகளோடு மேல்வயிற்றில்  வேதனை, கல்லீரல் உருப்பெருக்கம், மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படலாம். இரத்தத்தில் அமைனோட்ரான்ஸ்பரேசின் அளவு அதிகரிக்கும் இந்த நோய் மெல்ல மெல்ல முதிர்ச்சியடைந்து கல்லீரல் நார்த்திசு நோயாக மாறுகிறது.

மது அருந்துவதன் காரணத்தால் ரத்தப் போக்குடன் கூடிய குறுகியகால தீவிர கணைய அழற்சி உண்டாகும். மது அருந்துவதால் மூளைமற்றும் நரம்புகள் பாதிப்படையும். சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படும். மேலும் இனப்பெருக்க இயல்பாதிப்புகள் மட்டுமின்றி மனநலம் பாதிப்புகளும் உண்டாகும்.

பாதிப்படைந்த கல்லீரலை அகற்றி மாற்றுக் கல்லீரலைப் பொருத்தும் வசதி  நவீன காலத்து மருத்துவமுறையில் உள்ளது என்றாலும் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நிச்சயமாக மிகவும் சிரமமான ஒன்றாகும். 75 சதவீதம் வரை ஒருவரிடமிருந்து கல்லீரலை வெட்டி எடுத்தாலும் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மை கொண்டது.

மதுவை ஒழித்து கல்லீரலை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் அத்தியாவசியமான கடமையாகும். மது கல்லீரலை கரைத்து உயிர்ப்பலியை பெருமளவில் உண்டு பண்ணுகிறது.