Home சினிமா பாசிட்டிவ் டைட்டிலுக்கு மாறிய விஜய் ஆண்டனி

பாசிட்டிவ் டைட்டிலுக்கு மாறிய விஜய் ஆண்டனி

26
0
SHARE

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டணி தான் நடிக்கும் படங்களுக்கு நெகடிவான டைட்டிலை வைத்து பிரபலமானவர். எமன் படத்திற்குப்பிறகு அவர் நடிக்கும் படங்களுக்கு பாஸிட்டிவான டைட்டிலை வைக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு பணிகளை விஜய் ஆண்டனியே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமுக இயக்குநர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி ஆசிரியர், குடிகாரர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கின்றனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான `காளி’ படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.