Home சுடச்சுட ரூ.100 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத்துறை கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

ரூ.100 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத்துறை கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

19
0
SHARE

சென்னை, செப். 7&

ரூ.100 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத்துறை கட்டடிங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்,

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண்மைத் துறை சார்பில் திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களுக்கான மத்திய சந்தையை  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 35 கோடியே  54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், 9 பரிவர்த்தனைக் கூடங்கள், 7 கிடங்குகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம்  கள்ளிக்குடியில் நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள்மற்றும்பூக்களுக்கானமத்தியசந்தையைகாணொலிக்காட்சிமூலமாகமுதல்வர்எடப்பாடி

கே.பழனிசாமி  திறந்து வைத்தார்.

இந்த புதிய மத்திய சந்தை மூலம், விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பினை அதிகரித்திடவும், வியாபாரிகள் சிரமமின்றி பரிவர்த்தனை மேற்கொள்ளவும் வசதியாக இருக்கும். இந்த மத்திய சந்தை, 1000 கடைகள், 2000 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு, 60 மெட்ரிக் டன் எடைமேடை, 2 தரம் பிரித்து வகைப்படுத்தும் கூடங்கள், வங்கி மற்றும் உணவக வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர், தருமபுரி மாவட்டம்  தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிபட்டி, திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை மற்றும் ரெட்டியார்சத்திரம், புதுக்கோட்டை மாவட்டம்  திருவரங்குளம், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் (துவாக்குடி) மற்றும் வையம்பட்டி, தேனி மாவட்டம் தேனி, திருநெல்வேலி மாவட்டம்  சங்கரன்கோவில் மற்றும் தென்காசி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர், ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கக் கட்டடங்கள்; நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் கீழ் விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்  லால்குடி, தேனி மாவட்டம்  கம்பம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலூர் மாவட்டம்  பண்ருட்டியில் அலுவலக கட்டடத்துடன் கூடிய கிடங்கு, என மொத்தம் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கிடங்குகள்.

தஞ்சாவூர் மாவட்டம்  பூதலூரில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவருடன் கூடிய பரிவர்த்தனைக் கூடம் மற்றும் ஒரத்தநாட்டில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலர்களத்துடன் கூடிய பரிவர்த்தனைக் கூடம்; விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம், உளூந்தூர்பேட்டை, சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, வளத்தி, அவலூர்பேட்டை மற்றும் சங்கராபுரம் ஆகிய இடங்களில் 4 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை தொகுப்புடன் கூடிய பரிவர்த்தனைக் கூடங்கள்; என மொத்தம், 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 58 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 53 மகிந்திரா பொலிரோ ஜீப்புகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  5 வாகன ஓட்டுநர்களுக்கு ஜீப்புகளுக்கான சாவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் சிரு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.