Home தமிழகம் கோவை கோட்டத்தில் இன்சூரன்ஸ் வார விழா

கோவை கோட்டத்தில் இன்சூரன்ஸ் வார விழா

52
0
SHARE

கோவை, செப். 7 &

கோவை திருச்சி சாலையில் உள்ள கோட்ட அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழாவை முதுநிலை கோட்ட மேலாளர் பசூலூல் ரஹ்மான் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், எல்.ஐ.சி. தனது சேவையை 1956ம் ஆண்டு ரூ.5 கோடி மூலதனத்துடன் ஆரம்பித்து, இன்று 25 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்களை கொண்டுள்ளது.

2017,18 நிதியாண்டில் 23 பாலிசி திட்டங்களுடன் தொடங்கி, இவ்வாண்டில் இதுவரை ஸ்தம்ப், ஆதார் ஷிலா, ஜீவன் உமங் மற்றும் பிரதம மந்திரி வய வந்தன யோஜனா ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

வைரவிழா ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பீமா டைமண்ட் திட்டத்தில் கோவைக் கோட்டம் இதுவரை 15,083 பாலிசிகளை விற்பனை செய்து ரூ.9.06 கோடி முதல் பிரீமியமாக ஈட்டியுள்ளது. 61ம் ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள எல்.ஐ.சி நிறுவனம், இன்சூரன்ஸ் வாரவிழாவை செப்.1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கொண்டாட உள்ளது.

காப்பீட்டின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இன்சூரன்ஸ் வார விழா கொண்டாடப்படும் என்றார். பேட்டியின் போது மார்க்கெட்டிங் மேலாளர் ஸ்ரீனிவாசாராவ், முதல்வர் ஓம்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.