Home உலகம் பருவநிலை மாற்றத்தை புறக்கணிக்கும் நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும் ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தை புறக்கணிக்கும் நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும் ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

10
0
SHARE

நியுயார்க், செப். 7&

பருவநிலை மாற்றத்தை புறக்கணிக்கும் நாடுகள் எதிர்காலத்தில்அழிவை சந்திக்க நேரிடும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டொனியோ குடேர்ரெஸ் 1995ம் ஆண்டுக்குப் பிறகு, இயற்கைச் சீற்றங்களால் அமெரிக்காவில், 2 கோடியே 42 லட்சம் பேர் வாழ்விடங்களை இழந்து வெற்றிடங்களாக மாறிவருகிறது என்று ஆன்டொனியோ குடேர்ரெஸ் கூறியுள்ளார். டெக்சாஸில் சமீபத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தை குறிப்பிட்டுப் பேசிய அவர், மீட்பு மற்றும் நிவாரணங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா. சபை செய்து தரும் என உறுதியளித்தார். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் அதன் அவசியம் குறித்தும் ஐ.நா. பொதுச்செயலாளர் பேசினார். பருவநிலை மாற்றத்தை இந்த இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பு உறுதிப்படுத்தி வருவதாகவும், விஞ்ஞானிகள் எச்சரிக்கையைப் புறக்கணிக்கும் நாடுகள் எதிர்காலத்தில் அழிவை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here