Home இந்தியா சரத்யாதவின் மாநிலங்களவை எம்.பி பதவியை பறிக்க வலியுறுத்தி துணை ஜனாதிபதியிடம் ஜனதா தள தலைவர்கள்...

சரத்யாதவின் மாநிலங்களவை எம்.பி பதவியை பறிக்க வலியுறுத்தி துணை ஜனாதிபதியிடம் ஜனதா தள தலைவர்கள் மனு

21
0
SHARE

புதுடெல்லி, செப். 7&

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சரத்யாதவின் மாநிலங்களவை எம்.பி பதவியை பறிக்க வலியுறுத்தி துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவிடம் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் மனு அளித்தனர்.

பீகாரில் காங்கிரஸ் மற்றும் லாலு கட்சியுடன் வைத்திருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பா.ஜ. கூட்டணியில் இணைந்தார் அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமார் சார்ந்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் சரத்யாதவ், தொடர்ந்து நிதிஷ்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால் கட்சியிலிருந்து விலகவில்லை.

அவரை நிதிஷ்குமார் கட்சியிலிருந்து நீக்கவும் இல்லை. சரத்யாதவ் தற்போது மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார்.பீகார் மாநிலத்திலிருந்து கடந்த 2016ம் ஆண்டு அவர் மாநிலங்களவைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது பதவிக்காலம்  வரும் 2022ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.அவரை கட்சியில் இருந்து நீக்கினால் எம்.பி பதவியை பறிக்க முடியாது என்பதால் நிதிஷ்குமார் நடவடிக்கை  எடுக்கவில்லை. ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை கட்சி தலைவர் பதவியை மட்டும் அவரிடமிருந்து பறித்தார்.இந்நிலையில் அவரது எம்.பி பதவியை பறிக்க  வேண்டும் என மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடுவிடம் நிதிஷ்கட்சி தலைவர்கள் ஆர்.சி.பி சிங், சஞ்சய் ஜா ஆகியோர்  மனு கொடுத்தனர். அதில் கட்சியின் கட்டளையை மீறி லாலு நடத்திய பேரணியில் சரத்யாதவ் கலந்து கொண்டார்.இது கட்சி விரோத நடவடிக்கையாகும். இந்த   பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என ஏற்கனவே அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.அதை மீறி பேரணியில் கலந்து கொண்டதுடன், கட்சி தலைமையை  பேரணியில் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். எனவே அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த மனுவுடன்  சரத்யாதவின் கட்சி விரோத நடவடிக்கை தொடர்பான பல ஆவணங்கள் அளிக்கப்பட்டிருப்பதாக ஆர்.சி.பி சிங் தெரிவித்தார்.