Home இந்தியா ஜம்மு காஷ்மீரில் மின்சாரத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் மின்சாரத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு

15
0
SHARE

ஸ்ரீநகர், செப். 7&

ஜம்மு காஷ்மீரில் மின்சாரத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மின்சாரத் துறை ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி செப்டம்பர் 12&ம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள் வேலைகளை ஒழுங்குபடுத்தாததால் வேலை  பளு அதிகரித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் மற்றும் மாநில அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. என ஜே.கே. மின் ஊழியர் சங்க தலைவர் அப்துல் சலாம் ராஜ்பூரி கூறினார்.

மேலும் பிரச்சனைகள் பற்றி அரசாங்கத்திடம் பல முறை முறையிட்ட போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, செப்டம்பர் 12ம் தேதியில் இருந்து 72 மணி நேர வேலை

நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர்களுடைய கோரிக்கைகள் “உண்மையானது” என்றும், செப்டம்பர் 14ம் தேதி அரசாங்கம் அவர்களை சந்திக்கத் தவறினால், அவர்கள் தீவிரமாக போராட்டத்தை நடத்த இருப்பதாக கூறினார்.