Home விளையாட்டு என்.எல்.சி. விளையாட்டு பள்ளி விடுதி மாணவர்கள் சாதனை

என்.எல்.சி. விளையாட்டு பள்ளி விடுதி மாணவர்கள் சாதனை

12
0
SHARE

நெய்வேலி, செப். 7&  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் பிரிவில் கடந்த 25. 8. 2017 முதல் 28. 8 .2017 வரை மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியை நடத்தியது. இதில் ஆடவருக்கான பிரிவில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவன விளையாட்டு பள்ளி விடுதி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். இவர்கள் தமிழ்நாடு பள்ளி கல்வி துறையால் திருநெல்வேலியில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடத்த விருக்கும் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் இரண்டாம் பிடித்த மாணவர்களை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவன பள்ளிகளின் செயலாளர் நெடுமாறன், விடுதியின் தாளாளர் கோபாலகிருஷ்ணன், தலைமையாசிரியை தெரசா, பயிற்றுநர் குமரன், உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here