Home சிறப்புச் செய்திகள் பறக்காத பறவைபென்குயின்

பறக்காத பறவைபென்குயின்

8
0
SHARE

ஸ்பெனிசிடே குடும்பத்தை சேர்ந்தவை பென்குயின். இவை அண்டார்டிக்கா போன்ற அதிக குளிர் மிகுந்த பகுதிகளில் மட்டும் வாழவில்லை, சிலவகை பென்குயின்கள் மிதவெப்பப் பகுதிகளிலும், பூமத்திய ரேகைக்கு அருகிலும் வாழ்கின்றன. மொத்தம் பதினேழு வகை பென்குவின்கள் உள்ளன, ஒவ்வொரு வகையும் பெரியது சிறியது என அளவில் வேறுபட்டு காணப்படும். நான்கு கோடி ஆண்டுகளுக்கு  முன்பே பென்குயின் தோன்றியதாக கூறப்படுகிறது.     

பென்குயின் இறக்கையை வீசிக்கொண்டு உடலை அசைந்து அசைந்து மெதுவாக நடக்கும் அழகைப் பார்க்கும் பொழுது சிரிக்காமல் இருந்திட முடியாது. இவை யானை நடைப்போல மெதுவாக நடந்தாலும் மிக வேகமாக ஒடும் திறனைப் பெற்றுள்ளது. சில சமயங்களில் பென்குயின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகரவும், உடலின் சக்தியை வீணாக்காமல் இருக்கவும் பனிக்கட்டிகளின் மீது தன் தொப்பையால் வழுக்கியபடியே செல்லும். பென்குயினின் முன்புறம் உள்ள வெள்ளை பகுதியானது ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. திமிங்கலம், நீர்நாய் போன்ற பென்குயின்களை கொன்று திண்ணக்கூடிய உயிரினங்கள், நீரிலிருந்து பார்க்கும் போது பென்குயினின் வெள்ளை நிற தொப்பை பகுதியையும், நீர் பரப்பையும் வேறுபடுத்தி காண்பது எளிதானதாக இருக்காது. இதனால் பென்குயின் அவைகளிடம் இருந்து உயிர் தப்பி செல்லும்.

பென்குயின், சிறிய வகை மீன்கள் மற்றும் இறால்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன. சிறிய பென்குயின் அதிக ஆழத்திற்கு செல்வதில்லை. இவை தங்களுக்கு தேவையான உணவை நீரின் மேற்பரப்பில் இருந்தே பிடித்துக் கொள்கின்றன.

ஆனால் பெரிய பென்குயின் ஆழமாக சென்றும் உணவை பிடிக்கின்றன. மீன், க்ரைல், ஸ்கிரிட் ஆகியவற்றை வேட்டையாடி உண்டப்படி 75 சதவிகித நேரத்தை இவை தண்ணீரிலேயே செலவழிக்கின்றன. பெரும்பாலும் கடலோரத்திலேயே பொழுதைக் கழித்தாலும், இனவிருத்திக்காக 56 மைல் தூரத்திற்கு பயணம் செய்கிறது இந்த பறக்க தெரியாத பறவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here