Home சிறப்புச் செய்திகள் ஹரப்பா நாகரிகம்…நேற்றைய தொடர்ச்சி…

ஹரப்பா நாகரிகம்…நேற்றைய தொடர்ச்சி…

14
0
SHARE

கலைகள்:

ஹரப்பாவின் சிற்பங்கள் மிகச்சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டதாகும். சுடுமண்ணாலான ஆண், பெண் உருவங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் முத்திரைகளில் வரையப்பட்டுள்ள செதுக்கோவியங்கள் சிற்பியின் திறமைக்கு சான்று பகிர்கின்றன. மொகஞ்சாதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளநாட்டிய மங்கைஎன்ற வெண்கல உருவ பொம்மை சிறப்பான கலைநயத்திற்கு எடுத்துக் காட்டாகும்.

அதன் வலது கை இடுப்பின்மீதும், வளையல்கள் அணிந்த இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது, ஹரப்பாவில் இரண்டு கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று மனிதனின் பின்பக்க வாட்டிலும் மற்றது நாட்டிய வடிவிலும் அமைந்துள்ளன. ஹரப்பா நகர மண்பாண்டங்கள் சிறந்த கலைநயமிக்கவையாகும். மண்பாண்டங்களும், குவளைகளும் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் உருவாக்கப் பட்டுள்ளன. வண்ணப்பூச்சுடன்கூடிய மண்பாண்டங்கள் தரமிக்கவையாகும்.

கோணவடிவிலான கோடுகள், வட்டங்கள், இலைகள், செடிகள், மரங்கள் போன்ற ஓவியங்கள் மண்பாண்டங்கள் மீது வரையப்பட்டுள்ளன. சில மண்பாண்டங்களில் மீன் மற்றும் மயில் உருவங்களும் காணப்படுகின்றன.

எழுத்து:

ஹரப்பா எழுத்து வடிவம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. 400 முதல் 600 வரையிலான வடிவங்கள் இருப்பினும் அவற்றில் 46 அல்லது 60 மட்டுமே அடிப்படையாக விளங்குகின்றன. எஞ்சியவை அவற்றின் மாற்றுவடிவங்களே. ஹரப்பா எழுத்துக்கள் பொதுவாக வலமிருந்து இடமாகவே எழுதப்பட்டுள்ளன. ஒருசில முத்திரைகளில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்தவரி இடமிருந்து வலமாகவும் மாறிமாறி எழுதப்பட்டுள்ளன. ஸ்கான்டிநேவியவைச்சேர்ந்தபார்போலாமற்றும்அவரதுஉடன்பணியாற்றும்அறிஞர்களும்

ஹரப்பா மக்களின் மொழி திராவிடமொழியே என்று முடிவு செய்துள்ளனர். சோவியத் அறிஞர் சிலரும் இக்கருத்தை ஏற்கின்றனர். வேறுசில அறிஞர்கள் ஹரப்பா எழுத்துக்களை பிராமி எழுத்துவகையுடன் தொடர்புப்படுத்துகின்றனர். ஹரப்பா எழுத்து பற்றிய புதிர் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

ஹரப்பா எழுத்து முழுவதும் படித்தறியப்படும்போது அப்பண்பாட்டின் சிறப்புகள் முழுமையாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

சமயம்:

முத்திரைகள், சுடுமண் உருவங்கள் மற்றும் செப்புவில்லைகள் போன்ற சான்றுகளிலிருந்து ஹரப்பா மக்களின் சமய வாழ்க்கை குறித்து அறியமுடிகிறது. அவர்களது முக்கிய ஆண் கடவுள் பசுபதி (முற்காலத்திய சிவன்). தியானவடிவில் அமர்ந்திருக்கும் அவருக்கு மூன்று முகங்களும் இரண்டு கொம்புகளும் காணப்படுகின்றன. நான்கு விலங்குகள் யானை, புலி, நீர்யானை, எருது வெவ்வேறு திசைகளைப்பார்த்த வண்ணம் அவரை சூழ்ந்துள்ளன. அவரது பாதத்தில் இரண்டு மான்கள் உள்ளன. இந்த உருவம் முத்திரைகளில் காணப்படுகிறது, அவர்களது முக்கிய பெண் கடவுள் தாய்க் கடவுளாகும். இதன் சுடுமண் வடிவங்கள் கிடைக்கின்றன. பிற்காலத்தில் லிங்க வழிபாடும் காணப்பட்டது. ஹரப்பா மக்கள் மரங்களையும், விலங்குகளையும் கூட வழிபட்டனர். பேய்கள், கெட்ட ஆவிகள் போன்றவற்றின்மீது நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தாயத்துக்களையும் அணிந்தனர்

இறந்தோரைப் புதைத்தல்:

மொகஞ்சாதாரோ, ஹரப்பா, காலிபங்கன், லோத்தல், ரூபார் போன்ற நகரங்களைச் சுற்றி கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லறைகள் ஹரப்பா மச்களின் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் குறித்து அறிய உதவுகின்றன. மொகஞ்சாதாரோவில் இறந்தோரை புதைக்கும் வழக்கமும், எரித்தபின்னர் எலும்புகளை புதைக்கும் வழக்கமும் வழக்கிலிருந்தன. லோத்தல் நகரில் புதைகுழியைச் சுற்றி செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா நகரில் மரத்தாலான சவப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜோடியாகவும் மட்பாண்டத்திற்குள் வைத்தும் இறந்தோரை புதைத்ததற்கான சான்றுகளும் லோத்தலில் கிடைத்துள்ளன. ‘சதிஎன்ற உடன்கட்டையேறும் வழக்கம் நிலவியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.

ஹரப்பா பண்பாட்டின் அழிவு:

ஹரப்பா பண்பாட்டின் அழிவு குறித்தும் அதற்கான சான்றுகள் குறித்தும் அறிஞர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வெள்ளப் பெருக்கு, நதிகள் வறண்டுபோடுதல், விளைநிலம் தனது வளத்தை இழத்தல், அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஹரப்பா நகரங்களின் அழிவுக்கு காரணங்களாக இருந்திருக்கக்கூடும்.

ஆரியர்களின் படையெடுப்பு ஹரப்பா நாகரிகத்திற்கு கடைசி மணியை ஒலித்தது என்பது ஒரு சில அறிஞர்களின் கருத்தாகும். கோட்டைகள் பல அழிக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் குறிப்பிடுகிறது. மேலும், மொகஞ்சாதாரோவில் கண்டெடுக்கப் பட்டுள்ள மனித எலும்புக்குவியல் அந்நகரம் அயலவரின் படையெடுப்புக்கு ஆளானதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆரியர்களிடம் வலிமைமிக்க ஆயுதங்களும், வேகமாக செல்லக்கூடிப குதிரைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர்கள் சிந்து வெளிப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை எளிதாக ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here