Home சிறப்புச் செய்திகள் டாஸ்மேனியா இனத்தின் அழிப்பு

டாஸ்மேனியா இனத்தின் அழிப்பு

18
0
SHARE

ஆஸ்திரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அழகிய தீவு அது நாய்கள் அற்ற தீவு  அங்கு 5000 இக்கும் மேற்பட்ட டாஸ்மேனியர்கள் என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறி  ப்பிடதக்கது

1810 ம் ஆண்டு பிரித்தானியர்களின் இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன.

இதற்கு முதல் வெளி உலகத்தையே அறிந்திராத அந்த மக்கள் இந்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள். இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.

பலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி இடம் பிடிக்க வேண்டும் வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள் அடிமைகளாக்கப்பட்டு இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர். டாஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை. வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்று புரியாமலும் இருந்தது ஏன் சாகிரோம் என்பது தெரியாமலே பரிதாபமாக பலர் உயிர் நீத்தார்கள் .

1828ம் ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொல்லாம் ஒரு வெள்ளையரல்லாதவரை கொன்றால் 3 பவுண்ட்ஸ் ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1 பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது .

இப்படி சட்டம் வந்ததும் என்ன நடந்திருக்கும் என்று நமக்கு தெரியும் 5000 பேராக இருந்த சமுதாயம் 75 ஆக்கப்பட்டது அதில் 72 ஆண்களும் 3 பெண்களும் தான் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிலிகளால் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்கள் .

இந்த காலப்பகுதியில் ஐரோப்பியாவில் இந்த கொடூர இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால் மீதமானவர்களை கொல்ல முடியாமல் இருள் சிறைக்குகையில் அடைத்துவைத்தார்கள். அங்கும் நயவஞ்சகமாக உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்டார்கள் .

1869 ம் ஆண்டு 2 பெண்களும் 1 ஆணும் மிஞ்சினார்கள். இறுதியாக அந்த ஒரு ஆணும் உணவின்றி இறந்து போக இதைக்கேள்விப்பட்ட ஐரோப்பிய சமுதாய விஞ்ஞானிகள் அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக்கொண்டார்கள். அந்த செயலுக்கு காரணம் ஒன்றும் பெருசில்லை ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரே நோக்குத்தான்.

1876 இறுதிப்பெண் ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும் கண் முன்னேயே துண்டாக்கி எடுத்துப்போனதை பார்த்திருந்தவள் உடல் நிலை மோசமாகி தனது பாஷையில் ஏதோ முனங்கிக்கொண்டிருந்தாள். அது என்ன என்பதை ஆஸ்த்ரேலிய பழங்குடி ஒருவர் மூலம் மொழி பெயர்க்கப்பட்டது. “எங்கள் சம்பிரதாயப்படி இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும் தயவு செய்து என்னுடைய உடலை சின்னாபின்னமாக்காதீர்கள் என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்என்றுகதறினாள்இதைகேட்டுசிரித்தவெறியர்கள்அப்பெண்இறந்ததும்அங்குஒருபக்கத்தில்புதைத்தார்கள்அந்தபெண்ணின்கடைசிஆசையும்நிறைவேறவேயில்லை

சிறிது காலத்தில் அதை தோண்டி எடுத்து டாஸ்மேனியா மியூஸியத்தில் இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப்போட்டு இருந்தார்கள். இந்த கேவலமான செயலை பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்ததால். 1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில் போட்டு மூடப்பட்டது. 1976 ம் ஆண்டு மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்து அடக்கம் செய்தார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here