Home தமிழகம் தொழில்முனைவோர்களுக்கு மின்சாரம் வழங்க புதிய திட்டம் அறிமுகம்முதல்வர் முன்னிலையில் முதல் ஒப்பந்தம்

தொழில்முனைவோர்களுக்கு மின்சாரம் வழங்க புதிய திட்டம் அறிமுகம்முதல்வர் முன்னிலையில் முதல் ஒப்பந்தம்

33
0
SHARE

சென்னை, செப். 6 &   தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு,  எளிய வகையில் வணிகம் என்ற திட்டத்தின் கீழ் தடையற்ற மின்சாரம் வழங்கிட முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மகேந்திரா தொழில் பூங்காவிற்கும் இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையப்பமானது.

தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக விளங்கி வருகிறது. மின்நுகர்வோர் நலனை மேம்படுத்தும் பொருட்டு, இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை, ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம், 7 நாட்களில் 112 கிலோ வாட் பளுவிற்கு உட்பட்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம், தட்கல் முறையில் விவாசாயிகள் மின் இணைப்பு பெறும் திட்டம், சூரியஒளி வேளாண்மை பம்ப்செட் திட்டம், மின் கட்டணம் செலுத்துவதற்கான அலைபேசி பயன்பாடு திட்டம்   போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மின்னூட்டி அளவில் எண்முறை அளவி பொருத்தப்படும். இத்திட்டம் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் தேவைப்படும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். எளிய வகையில் வணிகம் என்ற புதிய திட்டத்தின்படி, தொழில்முனைவோர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  முன்னிலையில் நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மகேந்திரா தொழில் பூங்காவிற்கும் இடையே கையப்பமானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மகேந்திரா தொழிற்பூங்கா சென்னை லிமிடெட் கும்மிடிபூண்டியில் 36 எம்.வி.ஏ. மின்பளுவுடன் நிறுவ உள்ள புதிய தொழிற்பூங்காவிற்கு, கும்மிடிபூண்டியில் உள்ள ஏலியம்பேடு கிராமத்தில் மகேந்திரா தொழிற்பூங்கா சென்னை லிமிடெட் வழங்கும் நிலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 110 கிலோ வோல்ட் துனை மின்நிலையம் அமைத்து தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கும். இந்த தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செலவிலேயே பிரத்யேக மின்னூட்டி அமைத்து தரப்படும்.

இயக்குனர், பகிர்மானம் தலைமையில் 15 நாட்களுக்கு ஒருமுறை தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை செய்யவும், இயக்குதல் மற்றும் பராமரிப்பு செய்ய ஏதுவாகவும், தொழிற்சாலை மின் நுகர்வோர்களின் குறைகளை நீக்கவும்  வசதி ஏற்படுத்தும் குழு ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது.  இதன் மூலம் தொழிற்சாலை நுகர்வோர்களின் குறைகளை நிவர்த்தி செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்   தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர்  விக்ரம் கபூர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சாய்குமார், மகேந்திரா தொழிற்பூங்கா சென்னை லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சங்கீதா பிரசாத், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.